பாஜக எம்.எல்.ஏ., மனசு வைத்ததால் இப்போதான் மின்சாரம் பஸ் வசதி கிடைச்சிருக்கு இந்த கிராமத்துக்கு!

மும்பை:

நம் நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு பின், சுமார் 200 பேர் வசிக்கும் குக்கிராமத்துக்கு, பாஜக., எம்.எல்.ஏ., உதவியால் மின்சாரம், பஸ் வசதி கிடைத்துள்ளதால் அந்த கிராமமே மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் கட்சிரோலி மாவட்ட எல்லைப் பகுதி கிராமம் அம்தேலி. காடுகள் சூழ்ந்த குக்கிராமமான இது மகாராஷ்டிரம் – தெலுங்கானா மாநில எல்லையில் உள்ளதால் தெலுங்கு பேசும் மக்களே அதிகம். மாவட்ட தலைநகரில் இருந்து 220 கி.மீ. தொலைவில் சிரோஞ்சா தாலுகாவில் உள்ள மலைப்பாங்கான பகுதி என்பதால் தேர்தல் நேரத்தில் மட்டுமே அரசியல்வாதிகள் வந்து செல்லும் பகுதியாக உள்ளது இது. நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் ஆகியும் மின்சாரம், போக்குவரத்து என அடிப்படை வசதிகள் இல்லாத கிராமமாக இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், இம்மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ராஜே அம்ப்ரிஷ் ராவ் அத்ரம், தனது பங்கு மாவட்ட வளர்ச்சி நிதியிலிருந்து ரூ. 45 லட்சத்தை அம்தேலி கிராமத்துக்கு ஒதுக்கினார். இதன் பின்னர், மாநில மின்சார வாரியம் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் வழங்கியுள்ளது. மேலும், அருகிலுள்ள நகரத்தில் இருந்து கிராமத்துக்கு போக்குவரத்து வசதியும் செய்தது.

இந்த இரு திட்டங்களை தொடங்கி வைக்க பாஜக., சட்டமன்ற உறுப்பினரான அத்ரம், பேருந்து மூலம் அம்தேலி கிராமத்துக்கு வந்தார். பூஜைகளைச் செய்த பின்னர், மின்சாரத்துக்கான சுவிட்சை ஆன் செய்து கிராம மக்களுக்கு ஒளி ஏற்றி வைத்தார். தங்கள் கிராமத்துக்கு மின்சாரம், பஸ் வசதி இரண்டும் ஒரே நேரத்தில் கிடைத்ததில், அவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories