விவசாயத் துறையில் தேவையான சீர்திருத்தங்கள் கொண்டது இந்த மசோதா!

Published:

modiji-speech
modiji-speech

Farm Bill 2020: விவசாயத்துறை சார்ந்து முக்கியமான சீர்திருத்த மசோதாக்கள் பாராளுமன்றத்தில் நிறைவேறி இருக்கின்றன.

விவசாயத்துறை சீர்திருத்தம் என்பது மிக அடிப்படையான மிக முக்கியமாக தேவைப்பட்ட…ஆனால்…அரசியல் ஆதாயத்திற்காக பல பத்து வருடங்களாக கிடப்பில் போடப்பட்டிருந்த சீர்திருத்தம்.

நாட்டில் உள்ள மொத்த விவசாயிகளில் 86 விழுக்காடு விவசாயிகள் 5 ஹெக்டருக்கு குறைவாக விவசாய நிலம் வைத்திருப்பவர்கள்.

ஒரு விவசாயி..தான் விளைவித்த விளைபொருளுக்கு தானே குறைந்தபட்ச அடிப்படை ஆதார விலையை நிர்ணயிக்க முடியாத நிலை ….

விவசாய விளைபொருளுக்கான உரிய விலை & லாபகரமான விலை ”நேரடியாக” விவசாயிகளுக்கு கிடைக்கவிடாமல் தடுக்கும் இடைத்தரகர்களின் ஆதிக்கம் + கமிஷன் முறை…

மாநிலங்களுக்கு இடையில் விவசாய விளைபொருளை விற்பதில் இருக்கும் இடைத்தரகு சிக்கல்கள்…

மாநிலத்திற்குள்ளேயே விளைபொருளை விற்பதில் இருக்கும் இடைத்தரகு சிக்கல்கள்…

தாங்கள் விளைவித்த விளைபொருளை தாங்களே சேமித்து வைக்கும் வகையில் பாதுகாப்பான சேமிப்பு கிடங்குகள் இல்லாமை…. என்று ஒரு விவசாயி எதிர்கொள்ளும் சிக்கல்கள் பலப்பல.

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?

சுருக்கமாக சொல்வதானால்…ஒரு விவசாயி தான் விளைவித்த விளைபொருளை..”நேரடியாக” வாங்குபவருக்கு லாபகரமான விலைக்கு விற்று பயனடையும் வழிவகை இல்லாமல் இருந்தது.

இத்தகைய மண்டிகள், இடைத்தரகு கமிஷன் சிக்கல்கள் போன்றவை … அரசியல் ஆத்திக்கத்திற்கும், அதன் வழியாக விவசாயிகளை அரசியல் குழுக்களாக மாற்றுவதற்கும் பயன்பட்டு வந்தது என்பதே கள எதார்த்தமாக இருந்து வந்தது.

விவசாயிகளுக்கு இருந்த இந்த சிக்கலை நீக்கி, ”குறைந்தபட்ச ஆதாரவிலைக்கு சிக்கலில்லாமல்”….விவசாயிகள் தாங்களே தங்கள் விளைபொருளுக்கு விலையை நிர்ணயித்து கூடுதல் லாபமடைய… இந்த சீர்திருத்த மசோதாக்கள் வழிவகை செய்கிறது.

அதனால் தான்..விவசாய இடைத்தரகு மூலம் அரசியல் ரீதியியாக + பொருளாதார ரீதியாக பெருலாபமடைந்து கொண்டிருந்த கட்சிகள்.. விவசாயத்தின் மீது தங்களுடைய அரசியல் ஆதிக்கத்தை இழந்துவிடும் அச்சத்தில்… இதனை எதிர்க்கின்றன.

விவசாய நாடான இந்தியாவில்…மிக மிக தேவைப்பட்ட அடிப்படையான சீர்திருத்தம் இது. இதனை தாண்டி…நடைமுறையில் ஏற்படக்கூடிய சிக்கலாக நான் பார்ப்பது ஒன்று உண்டு.

உதாரணமாக…. லாபம் தரும் விளைபொருட்களை நோக்கி விவசாயம் + விவசாயிகள் நகர்ந்துவிடும் போது ..சில பல பாரம்பரிய பயிர்கள் நாளடைவில் வழக்கொழிந்து போகும் நிலை உருவாகலாம்.

ALSO READ:  ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

சீர்திருத்தங்களில்… இதனை தடுப்பதற்கு.. ஏதேனும் வழிவகை கூறப்பட்டிருக்கிறதா.. என்பதை கவனிக்க வேண்டும்.

  • பானு கோம்ஸ் (Banu Gomes)

Related articles

Recent articles

spot_img