விஜயகாந்துக்கு லேசான கொரோனா தொற்று; இப்போது நலமுடன் உள்ளார்!

Published:

vijayakanth-with-sashti-kavacham
vijayakanth-with-sashti-kavacham

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் (68) உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், பெரிய அளவில் கட்சிப் பணிகளில் ஈடுபாடு காட்டாமல், வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதாகவும் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார் என்றும் செய்திகள் வெளியாயின.

பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை அடுத்து நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து தேமுதிக அலுவலகம் வெளியிட்ட அறிவிப்பில் தேமுதிக தலைவர் வழக்கமாக ஆறு மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக சென்னை மியாட் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம் அந்த வகையில் சென்னை மியாட் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சென்ற விஜயகாந்துக்கு லேசான கொரோனா அறிகுறி தென்பட்டது இருப்பினும் உடனடியாக அது சரி செய்யப்பட்டுவிட்டது தற்போது பூரண உடல் நலத்துடன் கேப்டன் விஜயகாந்த் உள்ளார் என்று தேமுதிக தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது

ALSO READ:  பழங்குடியினர் சலுகைகள் - யாருக்கு?
dmdk-vijayakanth
dmdk-vijayakanth

Related articles

Recent articles

spot_img