December 6, 2025, 3:53 AM
24.9 C
Chennai

ஶ்ரீகாளஹஸ்தியில் புதிய விக்ரகங்களால் பரபரப்பு! போராடும் எதிர்க்கட்சிகள்!

kalahasti3
kalahasti3

தங்கள் திருமணத்திற்காக ஜோதிடர் பேச்சைக் கேட்டு ஆந்திரா முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளனர் ஒரு சகோதரர்கள்.

ஸ்ரீ காளஹஸ்தியில் புதிதாகத் தோன்றிய சிவலிங்கமும் நந்தியும் பரபரப்பு ஏற்படுத்திய பதட்டத்தை அடுத்து, அண்ணன் தம்பி கள் மூவர் கைது செய்யப் பட்டுள்ளனர்.

kalahasti
kalahasti

அந்தர்வேதி கோவிலில் ரதம் பற்றி எரிந்த சம்பவம் எத்தகைய பரபரப்பை ஏற்படுத்தியதோ அத்தகைய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது இந்தச் சம்பவம்.

அந்தர்வேதி கோவில் ரதம் பற்றி எரிந்த சம்பவத்தை அரசியல் கட்சிகள் தீவிரமாக கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு ஆளும் கட்சி மீது தீவிரமாக குற்றச்சாட்டுகள் எழுப்பி வருகின்றன. இந் நிலையில் ஆந்திரப் பிரதேச அரசாங்கம் இந்த வழக்கு விசாரணையில் வெளிப்படைத் தன்மையை நிரூபித்து கொள்வதற்காக இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றியது.

இந்த சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள் புதிதாக சித்தூர் மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தியில் மற்றுமொரு பிரச்னை ஏற்பட்டுள்ளது. கோவிலில் காசிலிங்கம், ராமேஸ்வர லிங்கம் அருகிலேயே மற்றும் ஒரு லிங்கமும் நந்தியும் பிரதிஷ்டை செய்யப்பட்டது தென்பட்டது. இந்த விஷயத்தை அறிந்து கொண்ட ஆலய அதிகாரிகள் உடனே எச்சரிக்கை அடைந்து சிவலிங்கம் நந்தி சிலைகளை அங்கிருந்து நீக்கிவிட்டு வேத பண்டிதர்களைக் கொண்டு சுத்திகரண நிகழ்ச்சியை செய்வித்தார்கள்.

ஸ்ரீகாளஹஸ்தியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து கோவில் குருக்கள் சுவாமிநாதன் பேசுகையில் அபச்சாரம் நேர்ந்து விட்டதாக தெரிவித்தார்.

அந்தர்வேதி சம்பவம் குறித்து ஆந்திர பிரதேச அரசாங்கம் சிபிஐ விசாரணைக்கு தயாரானதால் அதற்குள் நிலைமை சற்று அடங்கி இருந்தது என்று நினைத்த நேரத்தில் மீண்டும் இங்கே ஸ்ரீகாளஹஸ்தியில் ஒரு சம்பவம் நடந்து விட்டதால் மீண்டும் ஒருமுறை அரசியல் கட்சிகள் ஆத்திரமடைந்தன.

ஸ்ரீ காளஹஸ்தியில் உள்ள காலி கோபுரம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் ஹிந்துக்களின் மன உணர்வுகளைக் காப்பாற்ற வேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்தினார்கள்.

ஹிந்துக்களின் கோவில்களில் பிற மதப் பிரச்சாரம் நடக்கிறது என்று இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒருமுறை தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு எதிர்ப்பு தெரிவித்தார்கள். வரிசையாக நடக்கும் சம்பவங்கள் மீது ஹிந்து சங்கங்கள் தீவிரமாக ஆத்திரமடைந்தன.

kalahasti2
kalahasti2

ஸ்ரீ காளஹஸ்தி கோவிலில் கல்லால் செய்த சிவலிங்கம் நந்தி விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்த 3 சகோதரர்களை திருப்பதி அர்பன் மாவட்ட போலீசார் கைது செய்துள்ளார்கள். ஒரு ஜோதிடரின் ஆலோசனையின் படி மூன்று அண்ணன் தம்பிகள் இந்த விக்ரகங்களை அங்கு பிரதிஷ்டை செய்துள்ளார்கள்.

இதுகுறித்து போலீசார் குற்றவாளிகளை கைது செய்து செய்தியாளர்களின் முன் நிறுத்தினார்கள். வழக்கு விவரங்களை அர்பன் எஸ்பி ரமேஷ் ரெட்டி செய்தி யாளர்களுக்கு விவரித்தார். போலீசார் இந்த வழக்கை மிகவும் சவாலானதாக எடுத்துக்கொண்டு பிரத்தியேக குழுக்கள் மூலம் கண்டறிந்ததாகத் தெரிவித்தார்.

சுமார் 100 சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை சோதனை செய்து குற்றவாளிகளை அடையாளம் கண்டதாக கூறினார்.

kalahasti1
kalahasti1

குற்றவாளிகள் சித்தூர் மாவட்டம் புத்தூர் நகரைச் சேர்ந்த மூன்று அண்ணன் தம்பிகள். பிண்டி சூலவர்தன் (32), பிண்டி திருமலய்யா (30), பிண்டி முனிசேகர் எனாபதாக அடையாளம் கண்டு கைது செய்ததாக தெரிவித்தார்.

திருமலய்யா, முனிசேகர் இருவரும் தீய பழக்கங்களுக்கு அடிமையாகி 30 வயது தாண்டியும் திருமணம் ஆகவில்லை. பொருளாதார பிரச்சினைகளும் மிக அதிகம் ஆனதால் ஜோதிடரின் ஆலோசனையை ஏற்று ஸ்ரீ காளஹஸ்தி கோவிலில் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்ய முடிவெடுத்தார்கள்.

அதன்படி இந்த மாதம் ஆறாம் தேதி கோவிலில் சிலைகளை ஸ்தாபித்தார்கள். திருப்பதிலேயே ஒரு சிற்பியிடம் இருந்து 7,500 ரூபாய் கொடுத்து சிவலிங்கமும் நந்தியும் வாங்கி ஸ்ரீ காளஹஸ்தியில் நிறுவினர்.

இந்த விவகாரம் குறித்து பெரிய அளவில் குற்றச் சாட்டுகள் எழுந்ததால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதன்படி சிசி கேமரா காட்சிகள் ஆதாரமாக குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்தார்கள். அவர்களிடம் இருந்து 2 இரு சக்கர வாகனங்களும் 3 மொபைல் போன்களும் கைப்பற்றியதாக எஸ்பி ரமேஷ் ரெட்டி தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories