திருமலை சுந்தரகாண்ட பாராயணத்தில் ஜெகன், எடியூரப்பா!

ஆன்மிகச் செய்திகள் இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
ap-jagan-yediyurappa
ap-jagan-yediyurappa

திருமலையில் சுந்தரகாண்ட பாராயணத்தில் பங்கு கொண்டனர் இரு மாநில முதல்வர்கள்!

திருமலை ஸ்ரீபாலாஜியை ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வியாழக்கிழமை காலை மீண்டும் ஒருமுறை தரிசித்து கொண்டார்.

முதல்வர் ஜகனோடு கூட கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவும் சுவாமி தரிசனம் செய்து கொண்டார். தரிசனத்திற்கு வந்த கர்நாடக முதலமைச்சரை மகா த்வார பிரவேச மார்க்கம் அருகில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வரவேற்பு கொடுத்தார்.

ap-jagan-yediyurappa1
ap-jagan-yediyurappa1

தரிசனத்திற்கு பிறகு வேத பண்டிதர்கள் இரு முதல்வர்களுக்கும் தீர்த்த பிரசாதமும் ஆசீர்வசனங்களும் அளித்தார்கள் .

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஜெகனோடு கூட திருமலா திருப்பதி தேவஸ்தானம் சேர்மன் ஒய்வி சுப்பாரெட்டி, துணை முதல்வர் ஆள்ள நானி, அமைச்சர்கள் பெத்திரெட்டி ராமச்சந்திரா ரெட்டி, பெல்லம்பள்ளி ஸ்ரீனிவாஸ், எம்எல்ஏ ரோஜா பங்கு கொண்டார்கள்.

ap-jagan-mohan
ap-jagan-mohan

ஸ்ரீவாரி தரிசனம் முடிந்த பிறகு கோவிலின் எதிராக உள்ள நாத நீராஜனம் மண்டபத்திற்கு இரு மாநில முதல்வர்களும் வந்தடைந்தார்கள். லோக க்ஷேமத்திற்காக கொரோனா பரவல் நிவாரணத்தை முன்னிட்டு டிடிடி சென்ற மார்ச் மாதத்திலிருந்து தன்வந்திரி மகாயாகம், யோக வாசிஷ்டம், கீதா பாராயணம், சுந்தரகாண்ட பாராயணம் நடத்தி வருகிறது. சுந்தரகாண்டம் நிகழ்ச்சியில் இரு முதல்வர்களும் பங்கு கொண்டார்கள்.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

காலை 8:10 மணிக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பாவோடு சேர்ந்து முதல்வர் ஜெகன் கர்நாடகா சத்திரங்களின் பவனம் நிர்மாணத்திற்குரிய பூமி பூஜையில் பங்கு கொண்டார்கள். அதன் பிறகு காலை 10:20 மணிக்கு ரேணிகுண்டா ஏர்போர்ட்டில் இருந்து சிஎம் ஜகன் கன்னவரம் கிளம்பிச் செல்வார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.