அறுவை சிகிச்சை செய்தபோது சிறுமி மரணம்! டாக்டர் தற்கொலை!

அடடே... அப்படியா? இந்தியா கிரைம் நியூஸ் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
doctor-suicide
doctor-suicide
  • அறுவை சிகிச்சை செய்தபோது சிறுமி மரணம். மருத்துவர் தற்கொலை.
  • கேரளாவில் உள்ள கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார்.

சில நாட்கள் முன்பு 7 வயது சிறுமிக்கு இந்த மருத்துவர் அறுவை சிகிச்சை செய்தார். அந்த சிறுமி மரணம் அடைந்தாள். சிறுமியின் மரணம் குறித்து சோஷியல் மீடியாவில் அந்த மருத்துவர் மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதனால் மனம் வருந்திய அந்த மருத்துவர் பாத்ரூம் சுவரின் மீது ‘சாரி’ என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சொந்த மருத்துவமனை நடத்தி வந்த ஆர்தோபெடிக் சர்ஜன் டாக்டர் அனூப் கிருஷ்ணா (35) தற்கொலை செய்து கொண்டார். இதனை போலீசார் சந்தேகத்துக்கிடமான மரணமாக அடையாளம் கண்டு வழக்குப்பதிவு செய்து கொண்டார்கள்.

வழக்கை விசாரித்து வரும் ஒரு போலீஸ் உயரதிகாரி பேசுகையில் சர்ஜரிக்கு பிறகு அந்த சிறுமி மரணம் அடைந்ததால் மருத்துவர் கவலை அடைந்ததாக தெரிகிறது என்றார். ஆயின் அதன் பிறகு அந்த மருத்துவருக்கு வந்த துன்புறுத்தல்களும் அச்சுறுத்தல்களும் குறித்து விசாரித்து வருவதாக கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.