பாஜக.,வில் இணைந்தார் நடிகை குஷ்பு!

kushboo-joined-bjp
kushboo-joined-bjp

காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டதாக கடிதம் எழுதிய குஷ்பு இன்று, தன்னை பாஜக.,வில் இணைத்துக் கொண்டார்.  

கடந்த சில நாட்களக பாஜக.,வில் சேர்வார் என்று கூறப்பட்ட நிலையில் இன்று காலை குஷ்புவின் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பதவி பறிக்கப்பட்டது  இதை அடுத்து,  குஷ்பு காங்கிரசில் இருந்து விலகினார்

தொடர்ந்து, இன்று பிற்பகலே பாஜக.,வில்  தன்னை இணைத்துக் கொண்டார் நடிகை குஷ்பு. பாஜக தேசியச் செயலாளர் சி.டி ரவி முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார்! 

பாஜக.,வில் இணைந்த பின்னர் பேசிய குஷ்பு, நாடு முன்னேற்றப்பாதையில் பயணிக்க மோடி போன்ற தலைவர் தேவை என்பதை உணர்ந்து கொண்டேன்! தமிழகத்தில் பாஜகவின் அடிமட்ட தொண்டராக செயல்பட உள்ளேன்!  பாஜக.,வில் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் மோடி, நாட்டை சரியான பாதையில் எடுத்து செல்கிறார்… என்று கூறினார். 

பாஜக., தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். தில்லி பாஜக., அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜக., தலைவர் எல்.முருகன் உடனிருந்தார். 

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

குஷ்பு இணைந்தது குறித்துக் கூறிய தமிழக பாஜக., தலைவர் எல்.முருகன், ‛தமிழகத்தில் பாஜக. கடந்த 6 மாதங்களில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பல அரசியல் கட்சியினர், இளைஞர்கள்  பாஜக.,வில் இணைகின்றனர். தமிழகத்தில் பாஜக.,வின் ஆட்சி வேண்டும் என அவர்கள் நினைக்கின்றனர். தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து குஷ்பு பாஜக.,வில் இணைந்திருக்கிறார். அவரை பாஜக., சார்பில் வரவேற்கிறேன்.. என்றார்.  

 அதன் பின்னர் குஷ்பு செய்தியாளர்களிடம் பேசியபோது… பாஜக.,வில் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பிரதமர் மோடி நாட்டை சரியான பாதையில் எடுத்து செல்கிறார். மோடி மாதிரியான தலைவரால் மட்டுமே நாடு முன்னேற முடியும். ஆளும்கட்சியை விமர்சிப்பதே எதிர்கட்சிகளின் விதி . காங்கிரசில் இருந்த போதும் நான் பாஜக.,வை ஆதரித்து பேசி உள்ளேன். நாட்டிற்கு எது நல்லது என தெரிந்து கொண்டதால் பாஜக.,வில் இணைகிறேன். மாற்றம் என்பது இயல்பு. தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக., வெற்றி பெற சிறப்பாக செயல்படுவேன் என்றார். 

தில்லி பாஜக., அலுவலகத்தில் வைத்து, அக் கட்சியில் இணைந்துள்ள குஷ்புவை பாஜக., நிர்வாகிகள் வரவேற்று பேசினர்.

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

பஞ்சாங்கம் ஜூலை 17 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

“மும்மொழிக் கொள்கை என்பது ஹிந்தி மட்டுமே அல்ல; வேறு எந்த மொழியையும் தேர்வு செய்யலாம். ஹிந்தி வேண்டாம் என்றால் சமஸ்கிருதம் படிக்கலாம். அதில் என்ன பிரச்னை?

FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!

இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026

மோடி கட்சி, அண்ணாமலை கட்சி, விஜய் கட்சி… தமிழகத்தில் இவை எப்படி?

இவ்வளவுதான் நாம் விருப்பு வெறுப்பில்லாமல், தமிழக மக்கள் நலனை மனதில் வைத்துச் சொல்லலாம். வருகின்ற காலம் தான் எது நிகழும், எது தேறும் என்பதைச் சொல்லும்.

Entertainment News

Popular Categories