அதிமுக-49: கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கட்சியினர் கொண்டாட்டம்!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் நெல்லை மதுரை லைஃப் ஸ்டைல்
admk-49-senkottai
admk-49-senkottai

அதிமுகவின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இன்று அதிமுகவினர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் கிருஷ்ணமுரளி @ குட்டியப்பா செங்கோட்டை காலாங்கரை மற்றும் விஸ்வநாதபுரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா வின் உருவப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அதிமுக கட்சி கொடியை ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

புதுகையில் அதிமுக 49-ம்ஆண்டு துவக்கவிழா: அமைச்சர் சி.விஜயபாஸ்கர் எம்ஜிஆர். சிலைக்கு மாலை அணிவிப்பு:

புதுக்கோட்டையில் அதிமுக வின் 49-வதுஆண்டு துவக்க தினத்தையொட்டி ,
பழைய பேருந்து நிலையத்தில் உள்ள நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் உருவச்சிலைக்கு, மாநில மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கட்சி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்வில் ,மாவட்ட ச் செயலாளர் கு.வைரமுத்து, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறுமுகம்,ரெத்தினசபாபதி மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ராஜபாளையத்தில்…

அதிமுகவின் 49 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இராஜபாளையத்தில் அதிமுகவினர் எம்.ஜி.ஆர் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து உற்சாக கொண்டாட்டம்:

admk-49-rajapalayam
admk-49-rajapalayam

அதிமுகவின் 49 ஆம் ஆண்டு துவக்க தினம் இன்று தமிழகம் முழுவதும் அஇஅதிமுக நிர்வாகிகள் தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் அதிமுகவின் 49 -ஆம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு சத்திரபட்டி சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் திரு உருவ சிலைக்கு நகர செயலாளர் பாஸ்கரன் அம்மா பேரவை நகர ச் செயலாளர் துரைமுருகேசன் தலைமையில் சிலைக்கு மாலை அணிவித்தும் அதிமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

பின்னர் கழகத்தின் நிறுவனத் தலைவர் பாரத ரத்னா புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புகழ் ஓங்குக அம்மாவின் புகழ் ஓங்குக என கோஷங்கள் எழுப்பி காப்போம், வருகின்ற 2021 -ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சியில் அமர்வதற்காக பாடுபடுவோம் தமிழக முதல்வராக மீண்டும் எடப்பாடி அவர்களை அமர வைப்போம் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு வெற்றியை சமர்ப்பிப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந் நிகழ்ச்சியில் , நகர அவைத் தலைவர் பரமசிவம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் வனராஜ் சொக்கநாதன் புத்தூர் நவரத்தினம் சேத்தூர் நகரச் செயலாளர் பொன்ராஜ் மற்றும் முன்னால் கவுன்சிலர்கள் லிங்கா முருகன் ,செல்வராஜ், மாரியப்பன், பாலசுப்பிரமணியம். கவிதா , மற்றும் கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுரையில்…

அதிமுக 49- ஆண்டு தினத்தை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நீதிமன்றம் அருகில் உள்ள கட்சியின் நிறுவனர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்திய மாவட்ட பொருளாளர் ஜெ.ராஜா, கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.எஸ். பாண்டியன் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் பங்கேற்றனர்.

admk-49-madurai
admk-49-madurai

அதிமுக 49- வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடந்தது : சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் அருகே அதிமுகவினர் 49 ஆவது ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடினார்கள். இதில், மூன்றாவது வார்டு கிளைச் செயலாளர் மணி தலைமை தாங்கினார் ஒன்றிய இளைஞரணி நாகராஜ் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நகரச் செயலாளர் கொரியர் கணேசன் அதிமுக கொடி ஏற்றி வைக்க முன்னாள் வார்டு உறுப்பினர் தண்டபாணி இனிப்பு வழங்கினார் இதில் கூ செ இளஞ்செழியன் ராமச்சந்திரன் அம்மா பேரவை சந்திரன் கேபிள் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்

admk-49-cholavanthan
admk-49-cholavanthan

அதிமுக 49- ஆண்டு தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்ட அம்மா பேரவை மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் அம்மா கோப்பைக்கான கிரிக்கட் போட்டியை தொடங்கிவைத்து வீரர்களுக்கு டீசர்ட் வழங்கிய எஸ்.எஸ். சரவணன் எம்எல்ஏ.

admk-49-madurai2
admk-49-madurai2

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கோவில்பட்டியில், அதிமுக சார்பில் 49-வது ஆண்டு விழாவையொட்டி ஏராளமானோர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்.

admk-49-alankanallur
admk-49-alankanallur

இந்த நிகழ்ச்சிக்கு அலங்காநல்லூர் ஒன்றிய அதிமுக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் அழகு ராஜா , வக்கீல் வெள்ளைச்சாமி, முன்னாள் அதிமுக அவைத் தலைவர் நடராஜன், முன்னாள் ஊராட்சித்தலைவர் சுரேஷ், கட்சி பொறுப்பாளர்கள் சம்பத், செந்தில், விஜயராகவன், ஒன்றிய நிர்வாகி சோணை, அதிமுக கிளைச் செயலர்கள் பொன்னையா, முத்துச்சாமி, பெரியபாண்டி, கேட்டுக்கடை ஆறுமுகம், பசுபதி, பூபதி, ஒன்றியக் கவுன்சிலர் பிரபு, புதுப்பட்டி பாண்டுரங்கன், தாமரை உள்ளிட்டோர், கோவிலூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.