அடடா… பெண்கள் குறித்து மனு தர்மம் இப்படியா சொல்லுது..?!

Published:

manu
manu

மனு ஸ்ம்ருதியில் பெண்களை பற்றி இப்படி தான் சொல்ல பட்டிருக்கின்றது……

மனு ஸ்மிருதி 3-56

யத்ர நார்யாஸ்து பூஜ்யந்தே ரமந்தே தத்ர தேவதா
யத்ரைதாஸ்து ந பூஜ்யந்தே ஸர்வாஸ்தத்ர அபலா க்ரியா

பெண்கள் எங்கே மதிக்கப்படுகிறார்களோ, அங்கே இறைவன் குடியிருந்து அருள்புரிவான். பெண்கள் எங்கே அவமதிக்கப்படுகிறார்களோ, அங்கே செய்யும் அத்தனை நற்செயல்களும் வீண் போகும்.

மனு ஸ்மிருதி 9-3

பிதா ரக்ஷதி கௌமாரே பர்த்தா ரக்ஷதி யௌவனே
ரக்ஷந்தி ஸ்தவிரே புத்ரா ந ஸ்த்ரீ ஸ்வாதந்த்ர்யம் அர்ஹதி

உயர்ந்த மணிபோன்ற, ரத்தினம் போன்றவளான பெண்மணியைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். இளம் வயதில் தந்தையும், வளர்ந்த பின் கணவனும், வயதான காலத்தில் மகன்களும் பெண்ணைப் பாதுகாக்க வேண்டும். பாதுகாக்காமல் விட்டுவிடக் கூடாது.

மனு ஸ்மிருதி 3-55

பித்ருபிர் ப்ராத்ருபிச் சைதை பதிபிர் தேவரைஸ் ததா
பூஜ்யா பூஷயிதவ்யாச்ச பஹு கல்யாணம் ஈப்ஸுபி

தந்தை, சகோதரர், கணவர், மைத்துனர் போன்ற ஒவ்வொருவரும் தாங்கள் நலமாக வாழ நினைத்தால், அவரவர் வீட்டில் உள்ள பெண்களை மதித்துக் கௌரவிக்க வேண்டும்.

ALSO READ:  நீர் தளும்பி அலைபாயும் அதிசயக் கிணறு; குஜராத்தில் பரபரப்பு!

மனு ஸ்ம்ருதி 3-58

ஜாமயோ யானி கேஹானி சபந்தி அப்ரதிபூஜிதா
தானி க்ருத்யாஹதானீவ வினச்யதி ஸமந்தத

எந்தெந்த இடங்களில் பெண்கள் தகாத, அறுவறுக்கத்தக்க வார்த்தைகளால் இகழப்பட்டு, அவமானப் படுத்தப் படுகிறார்களோ, அந்த இடமே விஷம் உண்டவன் அழிவது போல் அழிந்து போகும்.

மனு ஸ்ம்ருதி 9-26

ப்ரஜனார்த்தம் மஹாபாகா பூஜார்ஹா க்ருஹதீப்தய
ஸ்த்ரிய ஸ்ரீயச்ச கேஹேஷு ந விசேஷோஸ்தி கச்சன

தாய்க்குலமான பெண்கள் போற்றத்தக்கவர்கள், வணங்கத் தக்கவர்கள், இல்லத்தின் விளக்காய் விளங்குபவர்கள், வீட்டின் மகாலட்சுமியாய்த் திகழ்பவர்கள்.

மனு ஸ்ம்ருதி 9-11

அர்த்தஸ்ய ஸங்க்ரஹே சைனாம் வ்யயே சைவ நியோஜயேத்
சௌசே தர்மே அன்னபக்த்யாம் ச பாரிணாஹ்யஸ்ய சேக்ஷணே

வீட்டின் பொருளாதாரம், தூய்மை, சுகாதாரம், வீட்டில் நடக்கும் வழிபாடுகள், உண்ணும் உணவு ஆகிய விஷயங்களில் பெண்கள் முழு சுதந்திரத்துடன் செயல்பட வேண்டும்.

மனு ஸ்ம்ருதி 9-90

ஊர்த்வம் து காலாத் ஏதஸ்மாத் விந்தேத ஸத்ருசம் பதிம்

வயது வந்த பெண், தனது கணவனைத் தானே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

ALSO READ:  காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை... முக்கியத்துவம் என்ன?

மனு ஸ்ம்ருதி 9-130

யதைவாத்மா தத புத்ர புத்ரேண துஹிதா ஸமா
தஸ்யாம் ஆத்மனி திஷ்டந்த்யாம் கதம் அன்யோ தனம் ஹரேத்

மகனுக்கு நிகராக மகளையும் கருத வேண்டும். தந்தைக்கு ஒரு மகள் இருக்கும் போது, வேறொருவர் எப்படி அவர் சொத்தைக் கொண்டு செல்ல முடியும், மகளுக்கே சொத்தில் உரிமை உண்டு.

மனு ஸ்ம்ருதி 8-28

வசா அபுத்ராஸு சைவம் ஸ்யாத் ரக்ஷணம் நிஷ்குலாஸு ச
பதிவ்ரதாஸு ச ஸ்த்ரீஷு விதவாஸ்வாதுராஸு ச

பிள்ளையில்லாத, கணவனை இழந்த பெண்களோ, அல்லது கணவனைப் பிரிந்து தனியாக வாழும் பெண்களோ நாட்டில் இருந்தால், அவர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

மனு ஸ்ம்ருதி 8-352

பரதாராபிமர்சேஷு ப்ரவ்ருத்தான் ந்ரூன் மஹீபதி
உத்வேஜன கரைர்தண்டை சின்னயித்வா ப்ரவாஸயேத்

பெண்களின் கற்புக்குக் கேடு விளைவிக்கும் ஆண்களுக்கு அதிகபட்ச தண்டனை bh கொடுக்க வேண்டும். பிறர் இத்தகைய தவறைச் செய்வதற்கே அஞ்சும் அளவுக்கு அந்த தண்டனை இருக்க வேண்டும்.

ALSO READ:  இலவச உயர்தரப் பள்ளிகளை ஏன் தடுக்க வேண்டும்?

Related articles

Recent articles

spot_img