
பகுத்தறிவும் நிஜ அறிவும்
தங்களை அறிவுஜீவிகள் என்றும், தமிழறிஞர்கள் என்றும், தமிழைக் காக்கவும் பெண்ணியத்தைக் காக்கவும் அவதாரம் எடுத்தவர்கள் என்றும், மநுஸ்மிருதி உள்ளிட்ட ஸனாதன தர்ம சாஸ்திரங்களைக் கரைத்துக் குடித்தவர்களென்றும் பேசித்திரியும்
அறிவிலிகளுக்கு…
வேதா டி. ஸ்ரீதரனாகிய நான் எழுப்பும் சில கேள்விகள்:
1. சூத்திரன் என்பவன் வேசி மகன் என்று ஹிந்து தர்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது என்று ஈவெரா காலத்தில் இருந்து இன்று வரை நீங்கள் சொல்லி வருகிறீர்களே! உண்மையில், எந்த ஹிந்து மத நூலில் அவ்வாறு சொல்லப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக் காட்ட முடியுமா?
2. ஒரு மாதத்துக்கு முன்பு நைஷ்டிக பிரம்மசாரி ஒருவர், மனு ஸ்மிருதி பெண்கள் அனைவரையும் வேசிகள் என்று குறிப்பிடுகிறது என்று திரு(மா)வாய் மொழிந்திருக்கிறாரே, மனு ஸ்மிருதியில் மட்டுமல்ல, ஹிந்து சாஸ்திர நூல்கள் ஏதாவது ஒன்றில் அதுபோன்ற கருத்து ஒரே ஒரு இடத்திலாவது இருப்பதை உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா?
3. மனு ஸ்மிருதியை மனு என்பவர் எழுதினார் என்பதற்கு ஏதாவது வரலாற்றுச் சான்றுகளைக் காட்ட முடியுமா? அப்படியானால், அவர் எந்தக் காலத்தில் வாழ்ந்தார், எந்த இடத்தில் வாழ்ந்தார், அவர் இந்த நூலை எவ்வாறு எழுதினார், எதற்காக எழுதினார் முதலான விஷயங்கள் பற்றி வரலாற்றுச் சான்றுகள் என்னென்ன கிடைத்துள்ளன?
4. அட் லீஸ்ட் மனு என்ற ஒரு மனிதர் இந்தியாவில் வாழ்ந்தார் என்பதற்காவது ஏதாவது வரலாற்றுச் சான்றுகள் உண்டா?
5. அவர் எந்த ஜாதி அல்லது எந்த வர்ணத்தைச் சேர்ந்தவர் என்பதைக் காட்டும் வரலாற்று ஆதாரம் ஏதாவது உண்டா?
6. மனு ஸ்மிருதிதான் மனிதர்களை நான்கு வர்ணங்களாகவும், இதர ஜனங்களை ஐந்தாவது வர்ணத்தவர் அல்லது பஞ்சமர் என்று ஆக்கியதாகவும் சொல்லி வருகிறீர்களே! மனு ஸ்மிருதியில் பஞ்சமர் என்ற வார்த்தை இருக்கிறதா? இருந்தால், அத்தியாய எண்ணையும் சுலோக எண்ணையும் அந்த சுலோகத்தின் பொருளையும் குறிப்பிட முடியுமா?
7. இன்றைய ஜாதிப் பாகுபாடுகளுக்கெல்லாம் காரணம் மனு ஸ்மிருதி தான் என்று சொல்லி வருகிறீர்களே! இந்தியாவில் இதுவரை கிடைத்துள்ள ஸ்மிருதிகள் அனைத்திலும் சேர்த்து மொத்தமே 28 ஜாதிகள்தான் குறிப்பிடப்பட்டுள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா?
அப்படியானால் –
அ) தற்காலத்தில் இந்தியாவில் காணப்படும் 2000 + ஜாதிகள் எங்கிருந்து வந்தன?
ஆ) ஸ்மிருதிகளில் உள்ள அந்த 28 ஜாதிகளில் எத்தனை ஜாதிகள் தற்போதைய இந்தியாவில் காணப்படுகின்றன?
8. மனு ஸ்மிருதி மட்டுமல்ல, இந்தியாவில் இருந்ததாகச் சொல்லப்படும் அனைத்து ஸ்மிருதிகளில் ஏதாவது ஒரே ஒரு ஸ்மிருதியாவது, இந்தியாவின் ஏதாவது ஒரே ஒரு பகுதியிலாவது, இந்திய வரலாற்றின் ஏதாவது ஒரே ஒரு காலகட்டத்திலாவது அரசாங்கச் சட்டமாக இருந்தது என்பதற்கு ஏதாவது ஒரே ஒரு வரலாற்றுச் சான்றாவது காட்ட முடியுமா?
9. பண்டைய தமிழகத்தில் மனு ஸ்மிருதி அமலில் இருந்தது என்று சொல்கிறீர்களா?
அ) அப்படியானால் –
தமிழகம் மனுவின் பாரம்பரியத்தில் வந்த தேசமா? அதாவது, தனித்தமிழ் நாகரிகம், திராவிட நாகரிகம் என்ற உங்களுடைய கப்சாக்கள் எல்லாம் பொய் என்று ஒத்துக் கொள்கிறீர்களா?
ஆ) பண்டைய தமிழகத்தில் மனு ஸ்மிருதி அமலில் இல்லை என்று நீங்கள் சொன்னால் –
தமிழகத்தில் தீண்டாமைக்குக் காரணம் என்று யாரைச் சொல்வீர்கள்? தொல்காப்பியரையும் திருவள்ளுவரையுமா?
10. மோதி ஆட்சியை மனு ஸ்மிருதி ஆட்சி என்று வர்ணிக்கும் அதி மேதாவிகளே,
மனு ஸ்மிருதி ஆட்சியில் இருந்தால், பிராமணன் பூணூலை அறுப்பவனது கை துண்டிக்கப்பட்டிருக்கும். பிராமணர்களின் பூணூலை அறுத்த ரவுடிகள் எத்தனை பேருடைய கைகளை இதுவரை மோதி துண்டித்திருக்கிறார்?
மனு ஸ்மிருதி ஆட்சியில் இருந்தால், பிராமணனை இழிவாகப் பேசுபவர்களது நாக்கு அறுக்கப்பட்டிருக்கும். மோதி இதுபோன்ற எத்தனை ரவுடிகளின் நாக்குகளை இதுவரை அறுத்திருக்கிறார்?
11. ஸ்மிருதிகள்தான் ஜாதிப் பிரிவினைக்குக் காரணம் என்றால் –
முஸ்லிம்களிடையே நிலவும் 300-க்கும் மேற்பட்ட ஜாதிகளுக்கு எந்த ஸ்மிருதி காரணம்?
12. பெண்கள் முக்காடு போட்டுக் கொண்டுதான் வெளியே வர வேண்டும் என்று மனு ஸ்மிருதியில் உள்ளதா அல்லது இஸ்லாமிய நூல்களில் உள்ளதா?
13. பெண்களுக்கு எத்தகைய ஜீவனாம்சம் தரப்பட வேண்டும் என்று மனு ஸ்மிருதி சொல்கிறது? இதே விஷயத்தில் இஸ்லாமியச் சட்டங்கள் என்ன சொல்கின்றன? தற்போதைய இந்தியாவில் முஸ்லிம் பெண்களுக்கு அனுமதிக்கப்படும் ஜீவனாம்சம் எதை அடியொற்றியது, ஹிந்துக்களுக்கு அளிக்கப்படும் ஜீவனாம்சம் எதை அடியொற்றியது?
இதுபோல இன்னும் நாலைந்து டஜன் கேள்விகளை என்னால் கேட்க முடியும். ஆனால், உங்களைப் போன்றவர்கள், சொன்ன பொய்யையே மீண்டும் மீண்டும் சொல்லித் திரியும் அயோக்கியர்கள், எனவே, எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல மாட்டீர்கள் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் என்பதால் கேள்விகளை இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.
இறுதியாக –
உங்களில் யாராவது ஒருவருக்கு, கொஞ்சமாவது நேர்மையோ அல்லது அட் லீஸ்ட் சூடு, சுரணை, வெட்கம், மானம், ரோஷம் முதலிய குணங்களில் ஏதாவது ஒன்றாவது இருந்தால் –
நீங்கள் மனு ஸ்மிருதி குறித்துச் சொல்லும் அனைத்துக் காரணங்களையும் வைத்து நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு, மனு ஸ்மிருதி நூலைத் தடை செய்யுங்கள்.
உங்களில் யாராலும் அதைச் செய்ய முடியாது என்பது எனக்குத் தெரியும். ஏனெனில்,
1. உங்களுக்கு அறிவும் கிடையாது. சூடு சுரணை முதலான குணங்களும் கிடையாது. உங்கள் வார்த்தைகளில் நேர்மையும் கிடையாது
2. அப்படியே உங்களில் யாருக்காவது அறிவும் நேர்மையும் இருந்து, அவர் நீதிமன்றத்தில் வாதாடி, நீதிமன்றமும் அந்தக் கருத்துகளை ஏற்றுக் கொண்டு மனு ஸ்மிருதியைத் தடை செய்து விட்டால்….
– என்றெல்லாம் அத்தைக்கு மீசை முளைத்தால் கற்பனையில் மிதக்க வேண்டாம் காரணம், நீங்கள் இந்த விஷயத்தில் நீதிமன்றம் போவதை உங்களுக்கு ரொட்டித் துண்டு வீசுபவர்கள் யாரும் விரும்ப மாட்டார்கள்.
பிறகு என்னவாம், நீதிமன்றம் மனு ஸ்மிருதியைத் தடை செய்தால் இந்தியாவில் பைபிள், குரான், ஹதிஸ்களின் கதி என்ன ஆகும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஏனெனில் – அவர்கள் உங்களைப் போன்ற பகுத்தறிவுகள் அல்ல. அவர்களுக்கு நிஜமாகவே அறிவு உண்டு.