
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்யாததால், குற்றாலம் அருவியில் தண்ணீர் வரத்து குறைந்தது.
குற்றாலத்தில் ஆஃப் சீஸன் எனப்படும் இரண்டாம் சீஸன் முடியும் கால கட்டம். இருப்பினும் வடகிழக்குப் பருவ மழையின் போது அருவிகளில் நீர் வரத்து இருக்கும். இந்த முறை தென்காசி மாவட்டத்தில் மழை அளவு சுமாராகத்தான் இருந்தது.
கடந்த வாரம் ஓரளவு மழை பெய்ததால், அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. தற்போது மிதமான அளவு அருவிகளில் நீர் விழுகிறது. இருப்பினும் ஊரடங்கு தடை காரணமாக அருவியில் குளிக்க அனுமதி இல்லை. எனவே, அருவிக்கரையில் செல்பி எடுத்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.