தமிழகத்தில் இன்று… 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும்!

அடடே... அப்படியா? சற்றுமுன் தமிழகம் மதுரை
rain madurai - 2026

தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழகத்தின் கடற்கரை மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

rain-forecast
rain-forecast

தென் மாவட்டங்கள் மற்றும் வட கடலோர மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

வடகிழக்குப் பருவ மழை தொடங்கிய நாள் முதலே சென்னை மற்றும் சுற்றுப் பகுதிகளில் கனமழை பெய்து, சில இடங்களில் நீர் தேங்கியது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.