“விஜய்க்கே தெரியாமல் விஜய் பெயரில் கட்சி”! கட்சிக்கும் விஜய்க்கும் சம்பந்தம் இல்லை என தந்தை சந்திர சேகர் விளக்கம் அளித்துள்ளார்.
அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். கட்சியின் தலைவராக பத்மநாபன், பொதுச் செயலாளராக எஸ் ஏ சந்திரசேகர், பொருளாளராக ஷோபா ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர் என விண்ணப்பத்தில் தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஜய் மக்கள் இயக்கம், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியாக மாற்றி இருப்பதாக விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் கூறினார். மேலும், அரசியல் கட்சியை பதிவு செய்ததற்கும், விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார்.
அவரது விளக்கத்துக்கு ஏற்ப, நடிகர் விஜய்யும் ஓர் அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதில், தன் பெயரில் கட்சி இருந்தாலும், தனக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை : இன்று என் தந்தை திரு.எஸ்.ஏ.சந்திரசேகா் அவா்கள் ஓா் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளா்ா என்பதை ஊடகங்களின் வாயிலாக அறிந்தேன். அவா் தொடங்கியுள்ள கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித தொடா்பும் இல்லை என திட்டவட்டமாக எனது ரசிகா்களுக்கும் பொதுமக்களுக்கும் தொிவித்துக்கொள்கிறேன்.
இதன் மூலம் அவா் அரசியல் தொடா்பாக எதிா்காலத்தில் மேற்கொள்ளும் எந்த நடவடிக்கைகளும் என்னை கட்டுப்படுத்தாது என்பதை தொியப்படுத்திக்கொள்கிறேன். மேலும் எனது ரசிகா்கள், எனது தந்தை கட்சி ஆரம்பித்துள்ளாா் என்பதற்காக தங்களை அக்கட்சியில் இணைத்துக்கொள்ளவோ கட்சி பணியாற்றவோ வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அக்கட்சிக்கும் நமக்கும் நமது இயக்கத்திற்கும் எவ்வித தொடா்பும் கிடையாது என்பதை தொிவித்துக்கொள்கிறேன்.
மேலும் என் பெயரையோ புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடா்புபடுத்தி ஏதேனும் விவகாரங்களில் ஈடுபட்டால் அவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் தொிவித்துக்கொள்கிறேன்! என்று அந்த அறிக்கையில் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இதனிடையே, விஜய் பெயரிலான எஸ்.ஏ.சந்திரசேகர் தொடங்கியுள்ள கட்சி, திமுக.,வுக்கு போட்டியாக இருக்கும் என்று கூறப் படுகிறது. ஏற்கெனவே சர்க்கார் படத்தில் சில வசனங்களால் திமுக.,வினரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார் விஜய். இப்போது மேலும் சிக்கல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, கட்சியின் அடையாளத்தில் இருந்து தன்னை தனித்துவப் படுத்திக் காட்டுவதற்காக, இந்த அறிக்கையினை வெளியிட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் அலசப் படுகிறது.