அதிதீவிர நிவர் புயலுக்கு அடுத்து… 3 நாளில் மீண்டும் ஒரு புயல்?!

அடடே... அப்படியா? சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
nivar-cyclone
nivar-cyclone

அதிதீவிர நிவர் புயலுக்கு அடுத்து, மீண்டும் ஒரு புயல் வீசக்கூடும் என்று வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

வங்கக் கடல் பகுதியில் கடந்த 21ஆம் தேதி உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக உருவானது. அது தற்போது அதி தீவிர புயலாக மாறி, இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரியை ஒட்டி, கரையைக் கடக்க இருக்கிறது.

இந்த நிலையில் நிவர் புயல் கரையைக் கடந்த பிறகு அடுத்த 3 நாட்களில் வங்கக் கடல் பகுதியில் தாய்லாந்து வழியாக மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது என்றும், அதன் நிலையைப் பொறுத்து அடுத்தக் கட்டமாக புயலாக மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.