தர்ணாவில் பங்குபெற ரூ.200! பேசியபடி பணம் வராததால் பெண்கள் ஆத்திரம்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
protesters
protesters
  • தார்ணாவுக்கு வந்தால் ஒவ்வொருவருக்கும் 200 ரூபாய் பணம்…
  • பணம் கொடுக்காததால் பெண்கள் கோபம்.. ஆத்திரம்…

தர்ணா செய்வதற்கு வந்தால் பணம் கொடுப்போம் என்று கூறி அழைத்து வந்துவிட்டு.. தர்ணா முடிந்த பின்னர் பணம் கொடுக்காததால் டிஆர்எஸ் தலைவர்கள் மீது பெண்கள் ஆத்திரம் அடைந்தார்கள்.

மத்திய அரசு எடுத்து வந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக மெதக் மாவட்டம் தூப்ரான் முனிசிபாலிடியில் உள்ள கரீம்குடாவில் 44 வது தேசிய நெடுஞ்சாலையை அடைத்து போராட வேண்டுமென்று தெலங்கானா ராஷ்டிரீய சமிதி தலைவர்கள் தீர்மானித்தார்கள். நிகழ்ச்சிக்கு விவசாய சங்கத் தலைவர்களோ விவசாயிகளோ பெரிய அளவில் வரவில்லை. ஆனால் அமைச்சர் ஹரீஷ் ராவு பெரிய அளவில் கூட்டத்தைக் காட்ட வேண்டும் என்று விரும்புவார். அதனால் டிஆர்எஸ் தலைவர்கள் உள்ளூரில் உள்ள கல்லுடைக்கும் பெண்களில் 20 பேரை ஒவ்வொருவருக்கும் 200 ரூபாய் கொடுப்போம் என்று சொல்லி போராட்டத்திற்கு அழைத்து வந்தார்கள்.

தர்ணாவுக்குச் சென்றால் பணம் கொடுப்பதாகக் கூறியதால் மேலும் 30 பெண்கள் தாமாகவே முன்வந்து நிகழ்ச்சியில் பங்கு கொண்டார்கள். டிஆர்எஸ் தலைவர்கள் தாங்கள் நேரில் அழைத்தவர்களுக்கு மட்டுமே பணம் அளித்ததால் மீதம் இருந்த 30 பேரும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

டிஆர்எஸ் தலைவர்கள் அவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தாலும் அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. இறுதியில் பெண்களுக்கு பணம் கொடுக்காமலே தலைவர்கள் திரும்பிப் போனதால் அவர்கள் ஆத்திரமடைந்து கூச்சலிட்டார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.