
2021 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையை தயார் செய்ய 10 பேர் கொண்ட குழுவை அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் அமைத்துள்ளார்
இன்று தமிழக பாஜக., தலைவர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கையில்…
ஹெச்.ராஜா, விபி துரைசாமி, கே.அண்ணாமலை, பேராசிரியர் கனகசபாபதி, ராம.ஸ்ரீனிவாசன், எஸ்.கே. கார்வேந்தன், ஜி.கே.நாகராஜ், சசிகலாபுஷ்பா, எஸ்.எஸ்.ஷா, நாச்சிமுத்து ஆகிய பத்து பேரும் நியமிக்கப் பட்டுள்ளனர்.
