
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவதாக அறிவித்த நிலையில் அவரது கட்சியின் பெயர் என்னவாக இருக்கும் அது எத்தகைய கொள்கைகளை கொண்டிருக்கும் என்பது குறித்த பல்வேறு அனுமானங்கள் அரசியல் வட்டாரத்தில் உலா வந்தன
இந்நிலையில் நடிகர் ரஜினி ‘மக்கள் சேவைக் கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது …மேலும், 234 தொகுதியிலும் ஒரே விதமாக, மக்கள் சேவைக் கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
கடந்த சில நாட்களாகவே ரஜினி தேர்தல் ஆணையத்தில் கட்சியை பதிவு செய்ய ஏற்பாடு செய்து வருவது குறித்து பல்வேறு தகவல்கள் உலா வந்தன. தற்போது நடிகர் ரஜினி ‘மக்கள் சேவைக் கட்சி’ People Service Party என்ற பெயரில் புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
தமது கட்சியின் சின்னம் குறித்து ரஜினியின் தேர்வு செய்த பாபா முத்திரை கட்சிக்கு ஒதுக்கப்படவில்லை … பாபா முத்திரை சின்னத்தை கேட்ட நிலையில் ‘மக்கள் சேவைg கட்சி’க்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
1996ல் ரஜினி அரசியல் குரல் எழுப்ப காரணமாக இருந்தது பாட்ஷா திரைப்படம் தான் அந்தப்படத்தில் ரஜினி ஆட்டோகாரராக வேடம் கட்டி பெரும் வரவேற்பை ஆட்டோகாரன் ஆட்டோகாரன் என்ற அந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பு பெற்றது தான் எனவே அந்த பாடலையே இப்போது தனது கட்சிக்கான பாடலாகவும் ரஜினி தேர்ந்தெடுக்கக் கூடும்
நடிகர் ரஜினி தொடங்கவுள்ள கட்சியுடன் தமது தலைமையிலான காந்திய மக்கள் இயக்கத்தை இணைக்க ரஜினி மக்கள் மன்ற மேற்பார்வையாளர் தமிழருவி மணியன் திட்டமிட்டுள்ளார்.
தமிழருவி மணியன் தலைமையிலான காந்திய மக்கள் இயக்கத்தில் நிர்வாகிகள் பலர் உள்ளனர். அவர்கள் அனைவரும் ரஜினி கட்சி தொடங்குகிற மாநாட்டின்போது, ரஜினியின் கட்சியில் இணைய திட்டமிட்டுள்ளனர். இந்த இணைப்புக்குப் பின் அவர்கள் ரஜினி கட்சியின் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்படுவர் என்று கூறப் படுகிறது.
ஆடà¯à®Ÿà¯‹ சினà¯à®©à®®à®¾à®• இரà¯à®¨à¯à®¤à®¾à®²à¯ அடà¯à®¤à¯à®¤ தமிழகதà¯à®¤à®¿à®©à¯ à®®à¯à®¤à®²à¯à®µà®°à¯ ரஜினி அவரà¯à®¤à®¾à®©à¯