
தமிழகத்தில் உள்ள ஆண்டிப்பட்டியின் அழகான தோற்றத்தைப் பார்த்து ரசித்து லயித்து அதனை தனது டிவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல்.
ஆண்டிப்பட்டி வழியாக தேனி, போடி வரை செல்லும் மீட்டர் கேஜ் ரயில் பாதை தற்போது அகல ரயில் பாதையாக மாற்றப் பட்டு வருகிறது. இதில் மதுரையில் இருந்து ஆண்டிப்பட்டி வரை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்த நிலையில், ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள மேற்கு மலைத் தொடரின் அழகிய இயற்கைப் பின்னணியுடன் அமைந்த ரயில் பாதையின் தோற்றத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல்.