
2021 ஆங்கில புத்தாண்டு கொண்டாட்ட கூடுதல்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வெளிநாடுகள் சிலவற்றில் இப்போது புதிய வகையிலான கொரோனா தொற்று பரவி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில்…
டிசம்பர் 31 நள்ளிரவு மற்றும் ஜனவரி 1 ஆகிய தினங்களில் கடற்கரை மற்றும் சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி கிடையாது. தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உணவகம் மட்டும் வழக்கம் போல் செயல்படும். புத்தாண்டு கொண்டாட்டத்தால் மக்கள் அதிகளவில் கூடினால் கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளதால் அரசு இத்தகைய முடிவு எடுத்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.