நெல்லை மாவட்டம் தென்காசியில் புதிய பேருந்து நிலையத்தில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறை, வாகன காப்பகம், வணிக வளாக கட்டிடங்கள் அனைத்தும் ஒப்பந்த புள்ளி அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் கையில் உள்ளது.

ஒவ்வொரு கடைக்கும் ஒப்பந்த புள்ளி தவிர சில தொகை கட்டினால் மட்டுமே மீண்டும் பயன்படுத்தும் நிலையை தற்போதைய நகராட்சி ஆணையாளர் கண்டிப்புடன் செயல்படுத்தி வருகிறார்.

கழிப்பறை கழிவுகளை நள்ளிரவில் பேருந்து நிலையத்தின் பின்புறம் திறந்து விட சில தொகை ஒப்பந்தகாரர் மூலம் வாங்கியுள்ளார். மேலும் நகராட்சி குப்பைகளை புதிய பேரூந்து நிலையத்தின் வடதுபுறம் சேமித்து வைத்து காலையில் லாரிகளில் ஏற்றவும் கனிசமான தொகையை ஆணையர் பெற்று வருகிறார்… இப்படிப் பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தற்போது பராமரிப்புப் பணிக்காக பேருந்து நிலையத்தின் மேற்கூறை பகுதிக்கு செல்ல உள்ள பாதையை 3 லட்ச ரூபாய்க்கு தனி நபர் ஒருவருக்கு துணிக் கடை வைக்க அனுமதி வழங்கியுள்ளார்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

நேர்மையான நகராட்சி ஆணையாளர் ஏசுராஜ். மின் விளக்கு எரியாமை, மழை நீர் தேங்குதல் முறையாக மின்சாரம் பழுது பார்க்க இந்த வழியை பயன்படுத்துவதால் தற்போது கடையின் ஒப்பந்ததாரர்கள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

மின் ஊழியர்கள் மேற்கூரைக்கு செல்ல வேண்டுமானால் கடைக்காரரிடம் தெரிவித்தால் எனது கடையில் மின் விளக்கு சரியாக உள்ளது.மேலே செல்ல வேண்டுமானால் ஆணையரிடம் அனுமதி கடிதம் வாங்கி வாருங்கள் என அலட்சியமாக கூறி வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் படிப்பகுதியில் உள்ள கடையை அப்புறப்படுத்தி மின் ஊழியர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்களின் சேவையை தொடர வழிவகை செய்ய வேண்டுமென வணிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending