
நாளைக்குள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யாவிட்டால், கடந்த ஆண்டைவிட இரு மடங்கு அதிகமாக அபராதம் செலுத்த வேண்டி வரும் என்று எச்சரிக்கிறார்கள் அத்துறையினர்!
வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதில், கடந்த ஆண்டுக்கும் இந்த ஆண்டுக்கும் இடையே முக்கியமான வேறுபாடு, உரிய காலக்கெடுவுக்குள் தாக்கல் செய்யவில்லை என்றால், விதிக்கப்படும் அபராதம் இரு மடங்கு என்பது தான். கடந்த ஆண்டு அபராதம் ரூ. 5 ஆயிரம் ஆக இருந்தது. இந்த ஆண்டு ரூ.10 ஆயிரம் என அதிகரிக்கப் பட்டுள்ளது.
எனினும், உங்கள் நிகர மொத்த வருமானம் அதாவது, தகுதியான கழிவுகள் மற்றும் வரி விலக்குகளைக் கோரிய பிறகான வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் அதிகமாக இருந்தால் மட்டுமே அபராதம் வசூலிக்கப் படும். அதே நேரம், உங்கள் நிகர மொத்த வருமானம் குறிப்பிட்ட நிதியாண்டில் 5 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால் ரூ.1000 அபராதமாக வசூலிக்கப் படும்.
கொரோனா கால சலுகையாக, இம்முறை வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கான கெடு டிச. 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. எனவே, ஜன.1ஆம் தேதி முதல் மார்ச் இறுதிக்குள் தாக்கல் செய்தால், ரூ.10 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
எனவே, இரு மடங்கு அபராதத்தை தவிர்க்க, நாளைக்குள் வருமான வரி படிவத்தை தாக்கல் செய்வது நல்லது