
மதிப்புக்குரிய ரஜினிகாந்த் அவர்களுக்கு, வணக்கம். 2017ல் கட்சி ஆரம்பிக்க போகிறேன் என்று நீங்கள் சொல்லி இருந்தீர்கள். அன்றிலிருந்து இரண்டு திராவிட கட்சிகளுக்கு மாற்றாக ஒரு சக்தி வர வேண்டும் என்று நினைத்த லட்சக்கணக்கான மக்களில் நானும் ஒருவன்.
ஆனால் இன்று திடீரென்று உடல்நிலையை காரணம் காட்டி கட்சி ஆரம்பிக்கவில்லை என ஒரு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளீர்கள். நீங்கள் உண்மையை பட்டவர்த்தனமாக பேசுபவராக இருப்பதால் தயவுசெய்து திரைமறைவில் என்ன நடந்தது என்ற உண்மையை உரக்கச் சொல்லுங்கள்….
எது உங்களை அரசியலுக்கு வரவிடாமல் தடுத்தது?. நல்லவர்கள் அரசியலுக்கே வர முடியாது என எதிர்கால தலைமுறை பயந்து ஒதுங்க நீங்கள் பாதை அமைத்து விடாதீர்கள்.
இவர்கள் எல்லாம் மிரட்டுகிறார்கள். இப்படியெல்லாம் நடக்க வேண்டி உள்ளது. இத்தனை லட்சம் கோடி பணம் புழங்கும் இடம். இதனை இந்த தகுதியுள்ள இவர்களால் தான் வெற்றி கொள்ள முடியும் என பட்டவர்த்தனமாக போட்டு உடைத்து விட்டாலே போதும். தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள்.
அதற்கு தகுந்த தயாரிப்போடு நேர்மையாளர்கள் அரசியலுக்கு வருவார்கள். எனவே அடுத்த தலைமுறைக்கான அரசியல் பாதை அமைத்து கொடுத்தவர் என்ற பெயராவது உங்களுக்கு மிஞ்சும். தயவுசெய்து சொல்லுங்கள். என்ன நடந்தது.???
எதிர்பார்ப்புடன்
பொதுஜனம்