திருவாதிரை களி செய்வது எப்படி?

thiruvadirai-kali
thiruvadirai-kali

திருவாதிரை களி செய்வது எப்படி?

ஆருத்திரா தரிசனம் அன்று மட்டுமே பெரும்பாலும் செய்யப்படும் இந்த களி சுவையில் சிறந்தது.

தேவையானவை:-

அரிசி 2 ஆழாக்கு
பயத்தம்பருப்பு 3/4 ஆழாக்கு
வெல்லம் 1/2 கிலோ
தேங்காய் துருவல் 1 மூடி
ஏலக்காய் 5
முந்திரி 10
நெய் 200 கிராம்

அரிசி , பயத்தம் பருப்பு இரண்டும் தனித்தனியாக வறுத்து, மிக்சியில் தனித்தனியாக ரவை பதத்தில் பொடித்துக்கொள்ளவும் . இப்பொழுது இரண்டும் ஒன்றாக சேர்க்கவும் . வெல்லம் சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்

அடுப்பில் கெட்டியான பாத்திரம் ஏற்றி , அதில் வெல்லாம் கரைத்த
நீரை ஊற்றி அதில் தேங்காய் துருவல் சேர்த்து தண்ணீர் நன்றாக
கொதிவந்ததும் பொடி செய்து வைத்துள்ள அரிசி + பயத்தம் பருப்பு சேர்த்து நன்றாக கலந்து குக்கரில் வைத்து விடவும் .

நன்றாக 8 விசில் சத்தம் வரை அடுப்பில் வைத்து பிறகு , அடுப்பில் இருந்து இறக்கிவிடவும் . மேலே நெயில் முந்திரி பருப்பு வறுத்து போடவும் , ஏலக்காய் பொடி செய்து போடவும் .

ALSO READ:  மதமாற்ற விவாதம் ... மீண்டும்!

நெய் அதிகமாக விட்டு கிளறவும் – சுவை கூடும் சுவையான திருவாதிரை களி தயார்.

thiruvathirai-kali
thiruvathirai-kali

திருவாதிரைக் களிக்கென்று தயாராகும் கூட்டு செய்வது எப்படி?

இதற்கு பிரத்தியேக கூட்டு ஓன்று உண்டு அதை 7 தான் கூட்டு என்று அழைப்பார்கள் அதைப் பற்றி தனியாக பார்க்கலாம் பொதுவாக இதை 7 தான் கூட்டு என்று சொல்லுவார்கள்
ஆனால் நாம் போடக்கூடிய காய்களை பார்ப்போம்

உருளைக்கிழங்கு
சேப்பங்கிழங்கு
சேனைக்கிழங்கு
அவரைக்காய்
வாழைக்காய் (விருப்பம் இருந்தால் )
கொத்தவரங்காய்
பீன்ஸ்
கேரட்
பச்சை பட்டாணி
மொச்சை
பூசணிக்காய்
பரங்கிக்காய்
சர்க்கரைவள்ளிக்கிழங்கு
பெங்களூர் கத்தரிக்காய் (சௌ சௌ)

தேவையானவை
மேலே சொன்ன காய்கறிகள்
பருப்பு 2 கப் ( வேகவைத்தது)
புளித்தண்ணி கரைத்தது (4 கப்)

வறுத்து பொடி செய்ய தேவையானவை

கடலைப்பருப்பு
வரமிளகாய்
தேங்காய் துருவல்
தணியா

வாணலியில் சிறிது எண்ணை விட்டு மேலே சொன்னவற்றை
தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும் , இதை மிக்சியில்
போட்டு பொடி செய்து வைத்துக்கொள்ளவும்

நறுக்கிய காய்களை கொஞ்சம் உப்பு சேர்த்து
தண்ணீர்விட்டு அடுப்பில் நன்றாக வேகவைக்கவும்

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

காய்கள் வெந்த நிலையில் கரைத்து வைத்த புளிக் கரைசலை சேர்த்து உப்பு , பெருங்காயம் சேர்த்து , அதனுடன் செய்து வைத்துள்ள பொடியை சேர்த்து , வேகவைத்து தயார் நிலையில் உள்ள பருப்பை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து
நன்றாக கொதிக்க விடவும் (கொதிக்கும் நேரம் அவரவர்
சுவைக்கும் திறனை பொருத்தது)

கடுகு உளுத்தம் பருப்பு தாளிக்கவும் , கருவேப்பிலை
போட்டு விடவும் . அடுப்பில் இருந்து இறக்கி , செய்துவைத்த களி , கூட்டை இறைவனுக்கு படைத்து , சுவைத்தால் சுவை கூடும்

திருவாதிரை களி :—

திருவாதிரை நன்னாளில் நடராஜருக்கு நிவேதனமாக களி செய்து படைப்பார்கள். ‘களி’ என்பது ஆனந்தம் என்றும் பொருள் தரும். அஞ்ஞானம் அகன்று மெய்ஞானம் தோன்றிய நிலையில் ஆன்மா ஆனந்த நிலையில் இருக்கும். சத், சித் ஆனந்தம் கிட்டும் என்ற தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததே திருவாதிரைக் களி நிவேதனம் ஆகும்.

திருவாதிரை விரதம் :–

மார்கழி மாத திருவாதிரை தினத்தன்று, விரதம் இருந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டால், நல்ல கணவன் கிடைப்பார். தாலிப் பலன் பெருகும். பாவங்கள் நீங்கும், அறிவும் ஆற்றலும் கூடும் என்பன போன்ற எண்ணற்றப் பலன்களைக் கொடுக்கும் விரதமாக இது உள்ளது. விபூலன், வியாக்கிரபாதர் போன்றவர்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்து பலன் பெற்றுள்ளனர்.

  • குட்டி வேணுகோபால்
ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories