
எத்தனை நாள் தான் ஜோக்கராக இருப்பது, நாமும் நம் பழைய ரவுடி கெட்டப்பை காட்ட வேண்டாமா என்று யோசித்து திமுக., தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ரவுடி அவதாரம் எடுத்தார். ஆனால்… வயதான காரணத்தால், சற்றே நடுங்கும் குரலில் மிரட்டல் விட்டதாக சமூக வலைத்தளப் புலிகள் கர்ஜித்து வருகின்றனர்.
தலைவா,சூப்பர் தலைவா!
இப்பதான் நீங்க ஒரிஜினல் தலைவரே. உங்களுக்குள்ளே 7½ வெற்றிக்கொண்டான், 5¾தீப்பொறி ஆறுமுகம், 2¼வண்ணை ஸ்டெல்லா,64¾ரெளடிங்க வந்துருக்காங்க.
கர்ர்ர்ர்ர்..த்தூ. ஆட்சியில இல்லாமயே இந்தத் திமிர் பேச்சு. முதல்வரே, இந்த ரெளடியை வழுக்குற பாத்ரூம் இருக்கிற Cellலே போடுங்க…. என்று டிவிட்டர் பதிவுகளில் பிரித்து மேய்கிறார்கள்… ஸ்டாலினின் இன்றைய மிரட்டல் கெட்டப்பை!
அப்படி என்ன நடந்தது?!
கோவையில் திமுக., கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற பெண் ஒருவர், ஸ்டாலினிடம் எதற்காக இந்தக் கூட்டம் நடத்துகிறீர்கள் என எதிர்க் கேள்வி கேட்டதால் அதிர்ந்து போன ஸ்டாலின், தனது அதிர்ச்சியை வெளிக்காட்டியபடி, அதிமுக.,வினருக்கு மிரட்டல் விடுத்தார். இதைஅடுத்து, அந்தப் பெண்ணை போலீசார் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
கோவை தொண்டாமுத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற திமுக., கிராம சபைக் கூட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சி தொடங்கியதும் அதில் பங்கேற்றவர்களின் கருத்துகளை ஸ்டாலின் கேட்டார். அப்போது திமுக., தொப்பி அணிந்த பெண் ஒருவர் எழுந்து, திமுக கட்சியை வைத்துக் கொண்டு எதற்காக கிராம சபைக் கூட்டம் நடத்துகிறீர்கள் என கேள்வி எழுப்பினார்.
இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. திமுக., வினர் ஸ்டாலின் முன்னிலையிலேயே அந்தப் பெண்ணைத் தாக்க முயன்றனர். அப்போது அந்தப் பெண், என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் என மீண்டும் கேள்வி எழுப்பினார்.
உனக்கு பதில் சொல்ல முடியாது. நீ அமைச்சர் வேலுமணி அனுப்பிய ஆள் என அந்தப் பெண்ணைப் பார்த்துக் கூறினார். ஆனால் அந்தப் பெண்ணோ தொடர்ந்து, ‛திமுக எதையும் செய்யவில்லை. கிராம சபைக் கூட்டம் நடத்துவது ஏன்” என மீண்டும் கேள்வி எழுப்பினார். இதனால் கோபமடைந்த திமுக.,வினர், ஸ்டாலின் முன்னிலையிலேயே அந்தப் பெண்ணையும், அவருக்கு பாதுகாப்புக்காக நின்ற போலீசாரையும் தாக்கினர். இதில் போலீசாருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தால், டென்ஷனான ஸ்டாலின், படபடப்புடன் பேச முயன்றார். வயதான காரணத்தால், நடுங்கும் குரலில் வேலுமணிக்கும், அதிமுக.,வினருக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் மிரட்டல் விட்டார்.
வேலுமணி அவர்களே, இத்தோடு நிறுத்தி கொள்ளுங்கள். இது போன்று நாங்கள் செய்தால், நீங்கள் மட்டுமல்ல முதல்வரே கூட்டம் நடத்த முடியாது. இது தான் மரியாதை. உங்களுக்கு தைரியம் இல்லை. அதனால் தான் திமுக தொப்பியை மாட்டிக் கொண்டு அமர்ந்தார். தைரியம் இருந்தால், அதிமுக என கூறி அமர்ந்திருக்க வேண்டும். இந்தக் கூட்டத்தை தடுக்க வேலுமணி முயற்சி செய்வது நேற்றே எனக்கு தெரியும். ஒரு கூட்டத்தை தடுக்க நீங்கள் முயற்சி செய்யலாம். ஆனால், உங்களின் எந்தக் கூட்டத்தையும் நடத்த விட மாட்டோம் என்றார்… மு.க.ஸ்டாலின்.
ஏற்கெனவே இன்னும் ஆறு மாதத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்துவிடுவோம் அதன் பிறகு உங்களை என்ன செய்கிறோம் பாருங்கள்… ஜாக்கிரதை என்ற ரீதியில் காவல் துறையினரை அரசு அதிகாரிகளை திமுக.,வினர் மிரட்டிக் கொண்டு வருகிறார்கள். ஸ்டாலினின் மகன் உதயநிதியே கூட காவல் அதிகாரியை மிரட்டி அதிர்ச்சி ஏற்படுத்தினார்.
முன்னதாக, நேற்று இந்தக் கூட்டத்துக்கு எதிராக தடை கோரி, இந்து முன்னணியின் சார்பில் தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளிக்கப் பட்டது. ( செய்தி )
ALSO READ: ஸ்டாலின் பாத யாத்திரையே போனாலும், வேப்பிலை கட்டி ஆடினாலும்… இந்து விரோதியே: காயத்ரி ரகுராம் டிவீட்!