
வாகன தேவை இருப்பவர்களுக்கு பட்ஜெட் விலையில் 3 புதிய ஸ்கூட்டிகள் சந்தைக்கு வந்துள்ளன.
2020 முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு தொழில்கள் நலிவடைந்து பல தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகுந்த பொருளாதார சிக்கல் ஏற்பட்டு உலகமே ஸ்தம்பித்து விட்டது.
இருப்பினும் அத்தியாவசிய தேவைகளுக்கு செலவு செய்ய வேண்டிய கட்டாய சூழலில் நாம் இருக்கிறோம்.
அந்த வகையில் வாகன தேவை இருப்பவர்களுக்கு பட்ஜெட் விலையில் 3 புதிய ஸ்கூட்டிகள் சந்தைக்கு வந்துள்ளன.
ரூபாய் 25000 முதல் அந்த பைக்குகளை பெற முடியும் அது குறித்த மேலதிக தகவல்களை பார்க்கலாம்..
AVON E Plus
இது ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டியாகும். இந்தியாவில் இந்த ஸ்கூட்டியின் ஆரம்ப விலை ரூ.25,000. குறிப்பாக சென்னையில் இதன் On-Road Price ரூ.27,000ல் இருந்து தொடங்குகிறது.

எஞ்சின் – எலக்ட்ரிக் BLDC மோட்டார்
அதிகபட்ச ஆற்றல் – 220 W
Range -50 KM/ Full Charge
அதிகபட்ச வேகம் – 24 KMPH
சார்ஜிங் நேரம் – 5-7 மணி நேரம்
இரு வீல்களும் Drum Brake கொண்டுள்ளது.
AVON E Lite
விலை ரூ.28,000.
எஞ்சின் – எலக்ட்ரிக் BLDC மோட்டார்
அதிகபட்ச ஆற்றல் – 232 W
Range -51 KM/ Full Charge
அதிகபட்ச வேகம் – 25 KMPH
சார்ஜிங் நேரம் – 4-8 மணி நேரம்
இரு வீல்களும் Drum Brake கொண்டுள்ளது.
Komaki Super
இந்த ஸ்கூட்டர் சற்று சிறப்பு மிக்க Komaki Super மாடலாகும். மோட்டாரில் இது முக்கிய இடம் வகிக்கிறது. பிளாஷ் ஒயிட் மற்றும் சிலேட் சில்வர் ஆகிய இரு நிறங்களில் இது கிடைக்கிறது. விலை ரூ.29,500 ஆகும்.

எஞ்சின் – எலக்ட்ரிக் Hub மோட்டார்
அதிகபட்ச ஆற்றல் – 350-500 W
Range – 60 KM/ Full Charge
அதிகபட்ச வேகம் – 35 KMPH
இரு வீல்களும் Drum Brake கொண்டுள்ளது.
எடை – 45KG.
இது போன்ற பட்ஜெட் விலை பைக்குகளை வாங்கும் போது உங்களுடைய தேவையும் பூர்த்தியாகும் கடன் பிரச்சனை மற்றும் ஈ.எம.ஐ பிரச்சனையும் இல்லாமல் இருக்கலாம்.