Homeஅடடே... அப்படியா?டிரம்ப் Vs டிவிட்டர்: மோடிக்கும் ஓர் எச்சரிக்கைதான்!

டிரம்ப் Vs டிவிட்டர்: மோடிக்கும் ஓர் எச்சரிக்கைதான்!

trump-vs-twitter
trump-vs-twitter

அமெரிக்காவில் இடதுகளும், சமூக வலைத் தள பெரு நிறுவனங்களின் பெரு முதலாளிகளும் இணைந்து நடத்தும் இரட்டை நிலை அரசியல் கவனிக்க தக்கது.

இன்றைய உயரிய தொழில்நுட்பம் நிறைந்த உலகில்..மக்களை இணைக்கும் / தொடர்புபடுத்தும் சமூக வலைத்தளங்களான Google, Twitter, whatsapp, போன்ற பல ஆகப்பெரும் தனியார் பெருநிறுவனங்கள்…மிகப்பெரும் அரசியல் ஆதிக்க சக்திகளாக வளர்ந்து நிற்கின்றன.

அதிகாரத்திற்கு வரத்துடிக்கும் அரசியல் கட்சிகளுக்கும், ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிக்களுக்கும் கட்டாயம் என்பதால் இருக்கும் மேல்பூச்சான பொறுப்புணர்வும், பொறுப்பேற்பும் கூட..இப் பெருநிறுவனங்களுக்கு கிடையாது.

அமெரிக்க சட்டம் Communications Decency Act -Section 230 .. தனி நபர்களோ / கூட்டாகவோ/ குழுவாகவோ இணைய வழி /சமூக வலைத்தளங்கள் வழியாக பதியும்/ பரிமாறிக் கொள்ளும் எந்த ஒரு கருத்துக்கும் …அந்தந்த சமூக வலைத்தளங்கள் பொறுப்பேற்க தேவையில்லை என்று சொல்கிறது.

இதனால்…அரசுக்கு & அமைப்புகளுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் வெறுப்பு பிரச்சாரம், மத வெறுப்பு பிரச்சாரம், தனி நபர் வெறுப்பு பிரச்சாரம் என்று வரைமுறையின்றி எது நடந்தாலும்..அவை எதுவும்…அந்தந்த வலைதள நிறுவனங்களின் பொறுப்பாகாது.

இந்த அசட்டுத்தனமான சட்டத்தை டிரம்ப் கடுமையாக எதிர்த்தார் என்றாலும்..இறுதியில்…. அமெரிக்க அதிபரின் கணக்கை முடக்குமளவிற்கு அதிகாரம் பெற்றதாக…இத் தனியார் நிறுவனங்கள் வளர்ந்து நிற்கின்றன என்பதே உண்மை !

மேலும், அமெரிக்காவில் .. twitter போன்றவற்றின் ஒருதலைப் பட்சமான monopoly +அரசியல் அதிகாரத்தை தடுக்கும் வகையில்.. இவற்றுக்கு போட்டியாக Gab, Parler போன்றவை உருவாக்கப்பட்டு…அவற்றை பெருமளவு அமெரிக்க மக்களும் பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

Google, twitter, apple போன்றவை ஒருங்கிணைந்து இவற்றை தங்களுடைய play store-ல் நீக்கியும், பயன்பாட்டை தடை செய்தும் முடக்குகின்றன.

இதற்கு கூறப்படும் காரணம்..இத் தளங்களின் வாயிலாக கலவரம் செய்வதற்கான ஒருங்கிணைப்புகள், செயல்பாடுகள் நடக்கின்றன என்பதாகும்.

twitter முழுவதும் இத்தகைய பேச்சுகளும் ஒருங்கிணைப்புகளும் கொட்டிக் கிடக்கிறதே !?! என்கிற கேள்விக்கு பதிலில்லை !

உலகின் பிற நாடுகளின் பிரதமர் /அதிபர்கள் ‘சிலர்’ …பிரான்ஸ் அதிபர் எடுத்த நடவடிக்கைக்கு எதிராக பதிவிட்ட கலவரத்தை தூண்டும் பதிவுகள் உள்ளனவே !?! என்கிற கேள்விக்கும் பதிலில்லை ! அமெரிக்காவும், டிரம்ப்-ம் எப்படியும் போகட்டும் !

ஆனால் twitter, fb + whatsapp, google, apple போன்ற பெரு முதலாளிகள்… தங்களுடைய அரசியல் சார்புக்கு ஏற்ப.. அரசுகளை வளைக்கும் / வீழ்த்தும் அளவிற்கு விஸ்வரூபமெடுத்து நிற்கிறார்கள் என்கிற உண்மையை …உலக நாடுகளின் தலைவர்கள் அனைவருக்கும் [ சீனா, வட கொரியா தவிர 🙂 ] …அமெரிக்க சம்பவங்கள் எச்சரிக்கை மணியாக ஒலித்திருக்கிறது.

இந்த நிலையில்…இந்தியாவில் twitter-க்கான மாற்றாக களத்திற்கு வந்திருக்கும் tooter-ல் பிரதமர் மோடி உட்பட பலரும் பதிவுகளை இடுகிறார்கள்.

வேடிக்கை என்னவென்றால்…tooter பாதுகாப்பானதாக இல்லை / twitter-ஐ அப்படியே அப்பட்டமாக காப்பி அடித்திருக்கிறார்கள் / இந்தியாவில் உருவாக்கப்படவில்லை என்றெல்லாம்…இதற்கு எதிராக பிரச்சாரங்கள் ..quint போன்ற வலைத்தளங்களில் முழு வேகத்தில் நடக்கிறது 🙂

டைனோசர் போல வளர்ந்து நிற்கும் google, twitter whatsapp போன்றவற்றிற்கு… களத்தில்… அதற்கு ஈடான போட்டியாளர்களை உருவாக்கினால் மட்டுமே …

அரசுகளையே புரட்டிப் போடும் சர்வாதிகாரத்தின் உலகளாவிய வலைப்பின்னலில் சிக்காமல் உலகின் ஜனநாயக நாடுகள் தவிர்க்க & தப்பிக்க முடியும்.

  • பானு கோம்ஸ்

Most Popular

உரத்த சிந்தனை :

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

18,079FansLike
375FollowersFollow
52FollowersFollow
74FollowersFollow
1,972FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

மக்கள் பேசிக்கிறாங்க

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

அகண்டா: தியேட்டரைத் தொடர்ந்து ஓடிடியிலும் சாதனை!

கொரானோ முதல் அலை வந்த பிறகு புதிய திரைப்படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடும்...

வைரமுத்து வாரிசா..? சர்ச்சையான பா ரஞ்சித் ட்விட்!

அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பா.ரஞ்சித் அதன் பின்னர் தொடர்ச்சியாக...

இரயில் நிலையத்தில் இறந்து கிடந்த புஷ்பா பட நடிகை!

புஷ்பா படத்தின் 'ஏ சாமி' பாடலில் நடனமாடிய நடிகை ஜோதி ரெட்டி ரயில் நிலையத்தில்...

கண்டுபிடியுங்கள்.. கஸ்தூரி வைத்த போட்டி!

நடிகை கஸ்தூரி முதன்முறையாக தனது மகனின் படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். சின்னவர், அமைதிப்படை, இந்தியன் என...

Latest News : Read Now...