
விவசாயிகளின் தோள்பட்டை சுமையை குறைக்கவே மோடி பாடுபட்டு வருகிறார். விவசாயிகளின் சுமையை குறைக்கவே மோடி விவசாய திட்டங்களை கொண்டு வந்துள்ளார் என பிரதமரின் சகோதரர் பிரகலாத் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
பிரதான் மந்திரி ஜன் கல்யாண்கரி யோஜனா அமைப்பின் தேசிய தலைவரும், பிரதமர் மோடியின் இளைய சகோதரருமான பிரகலாத் தாமோதிரதாஸ் மோடி மதுரை மடீசியா அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்தக் கூட்டத்தில் பிரதான் மந்திரி ஜன் கல்யாண்கரி யோஜனா அமைப்பின் உறுப்பினர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
முன்னதாக பிரகலாத் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து பேசுகையில், தமிழகத்தின் ஹீரோ நடிகரான ரஜினிகாந்திற்கு என் தரப்பிலும், பிரதமர் தரப்பிலும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.பாரதப்பிரதமரையும் அவரது நிர்வாகத்தையும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளதற்கு நன்றி தெரிவிக்கிறேன்.
சாதாரண குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்து பிரதமராகியுள்ளார் மோடி. அதனால் தான் ஏழ்மையான மக்களோடு இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏழை எளிய மக்களின் எண்ணங்களை, கனவுகளை பிரதமர் நிறைவேற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது.சாதாரண ஏழை எளிய மக்கள் வாழ்க்கையை உயர்த்த பிரதமர் அல்லும் பகலும் உழைத்து வருகிறார்.
ஏழை மக்களுக்கான திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு அவர்களை சென்று சேரவில்லை. பிரதமரின் திட்டங்களை மக்களிடம் இருந்து தூரப்படுத்த எதிர்க்கட்சிகள் நினைக்கின்றனர். பிரதமர் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க காங்கிரஸ் தலைவர்கள் தடை விதிக்க நினைக்கின்றனர். பிரதமர் திட்டங்களிலிருந்து மக்களை விலக்கி வைக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது.
பிரதமரின் ஏழை எளிய மக்களுக்கான திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க 22லட்சம் உறுப்பினர்கள் உள்ள நிலையில், மேலும் உறுப்பினர்களை அதிகப்படுத்த உள்ளோம்.ஜன் கல்யாண்கரி யோஜனா திட்டத்தை அனைவரிடமும் கொண்டு போய் சேர்ப்போம்.
இந்த யோஜனா திட்டம் இல்லாமல் 40 யோஜனா திட்டங்களையும் செயல்படுத்துவோம். மக்களிடம் கொண்டு போய் சேர்ப்போம். தமிழக மக்கள் பாசமானவர்கள். மதுரைக்காரர்கள் பாசமானவர்கள். விவசாயிகளுக்காக என்றுமே பாடுபடுபவர் மோடி.
விவசாயிகளுக்காக நிறைய திட்டங்களை மோடி கொண்டு வந்துள்ளார். அது கீழ் மட்டம் வரை செல்வதில்லை. விவசாயிகளின் தோள்பட்டை சுமையை குறைக்கவே மோடி பாடுபட்டு வருகிறார். விவசாயிகளின் சுமையை குறைக்கவே மோடி விவசாய திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.ஒரே நாளில் அடித்தட்டு மக்கள் வரை இந்த திட்டங்களை கொண்டு போக முடியாது எனக்கூறினார்.