
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். சூரியக் கடவுளைப் போற்றி வழிபடும் நாள் இந்தத் தைத் திங்கள் முதல் நாள். சூரியன் தன் பயணப் பாதையை வடகாலில் மாற்றிக் கொண்டு செல்வதைத்தான் உத்தராயணம் என்பர். இதன்படி, சூரிய பகவானுக்கு நம் நன்றியை அர்ப்பணிக்கும் விழாவாக தைப் பொங்கல் திருநாள் அமைகிறது.
ஆண்டாண்டு காலமாக, தமிழர்கள் பரம்பரை பரம்பரையாக, நம் உழைப்பால் வயலில் விளைந்த புத்தரிசியைப் பானையில் இட்டு, பாலில் கலந்து பொங்கி வரும் போது குலவையிட்டு, சூரியனைப் போற்றி வணங்கும் விதம், தமிழ் ரத்தம் உடலில் ஓடும் ஒவ்வொருவருக்குமே மிகச் சிறப்பானது. தனித்துவமானது.

இந்த சார்வரி வருட தை மாதம், ஆங்கில ஆண்டான இந்த 2021இல், ஜன.14ம் தேதி வருகிறது. இந்த நாளில், தை பொங்கல் பானை வைக்க, பூஜை செய்ய, உகந்த நேரமும் விவரங்களும் தமிழ் தினசரி தளத்தின் வாசகர்களுக்காக இங்கே தரப்பட்டிருக்கின்றன.
14.01.2021 வியாழக்கிழமை. மாசப் பிறப்பு
திருக்கணித பஞ்சாங்கப்படி காலை 08.15 என்றும்,
சுக்ல பட்ச ப்ரதமை காலை 09.03 வரையும் என்றும்,
வாக்ய பஞ்சாங்கப்டி காலை 11.08 ல் மாசப் பிறப்பும்,
சுக்ல ப்ரதமை திதி 09.27 வரையும் என்று கொடுத்திருக்கிறார்கள்.
அன்று உத்தராயண புண்ய கால தர்ப்பணம், மகர சங்கராந்தி, பொங்கல் பண்டிகை, சிரவண விரதம், சந்தர தர்சனம், கரிநாள்….
திருக்கணிதப் பஞ்சாங்கப் படி பிரதமை திதி முடிவில் 09.03 மணிக்கு சரியாக சுக்ர ஹோரையில் பொங்கல் பானை வைத்து தொடர்சியாக சூரிய நாராயண பூஜை செய்யலாம்.
வாக்கிய பஞ்சாங்கப் படி (பாம்பு பஞ்சாங்கம்) பார்த்தால், 11.15க்கு (அப்போது பாட்டிமை திதி போய்விடும்) வளர்பிறை சந்த்ர ஹோரையில் பொங்கல் பானை வைத்து பூஜை செய்யலாம்.
அன்று உத்தராயண புண்ணிய கால தர்ப்பணம் செய்ய வேண்டி இருப்பதால், தர்ப்பணம் முடித்து 11.15க்கு பொங்கல் பானை, தொடர்ந்து பூஜை செய்யலாம் என்பது பெரியவர்கள் தரும் வழிகாட்டுதல்.