
தில்லியில் ஜனக்புரி பகுதியில் உள்ள தப்ரி மோர் நிலையத்தில் திங்கள்கிழமை 45 வயதான ஒரு நபரின் உயிரைக் காப்பாற்றிய சிஐஎஸ்எஃப் வீரர் ஒரு ஹீரோ வாக மாறியுள்ளார். மயக்கமடைந்து விழுந்த 45 வயதான ஒருவருக்கு CPR அவசர முதலுதவி சிகிச்சையை வழங்கினார்.

அதிர்ஷ்டவசமாக, கடமையில் இருந்த கான்ஸ்டபிள் விகாஸ் உடனடியாக பயணி மீது இருதய புத்துயிர் (சிபிஆர்) மருத்துவ முறையை நிர்வகித்தார், அதைத் தொடர்ந்து அவர் மீண்டும் நினைவுக்கு வந்தார். பயணி மயக்கமடைந்து சரியாக சுவாசிக்கவில்லை என்பதைக் கவனித்தார், திடீரென விழுந்ததால் அவரது முகம் மற்றும் வாயில் காயம் ஏற்பட்டது.
இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகிவியருகிறது. மேலும் சிறப்பாக செயல்பட்டு உயிரை காப்பாற்றிய வீரருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.