பாஜக., ஆதரவு பெண் வேட்புமனு தாக்கல் செய்ய விடாமல் தடுத்து… ஜெகன் கட்சியினர் அடாவடி!

nellur-dt2
nellur-dt2

நெல்லூர் மாவட்டத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்களின் அடாவடித்தனம். நாமினேஷன் செய்யச் சென்ற பிஜேபி ஆதரவு பெண் வேட்பாளருக்கு தடைகள்…

நெல்லூர் மாவட்டம் சங்கம் மண்டலம் சித்திபுரம் பஞ்சாயத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்களின் அடாவடித்தனம் எல்லை மீறி விட்டது. பிஜேபி ஆதரவாளர் நாமினேஷன் செய்வதற்காக சென்றபோது தடை ஏற்படுத்தினார்கள்.

சித்திபுரம் சர்பஞ்ச் பதவியை பிசி பிரிவைச் சேர்ந்த பெண் வேட்பாளருக்கு ரிசர்வ் செய்துள்ளார்கள். இங்கு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தரப்பில் இறுதி நாளான வியாழக்கிழமை அன்று ஒரே ஒரு நாமினேஷன் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வியாழன் மதியம் 3 மணி அளவில் பிஜேபி ஆதரவாளர் நெல்லூர் சுசீலாம்மா தன் கணவர் நரசய்யாவோடு சேர்ந்து நாமினேஷன் செய்வதற்கு சித்திபுரம் தேர்தல் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு அவர் நாமினேஷன் பத்திரங்களை தயார் செய்து கொண்டிருந்த சமயத்தில் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்கள் அந்த பேப்பர்களை பலவந்தமாக பிடுங்கிக் கொண்டார்கள். இந்த செய்தியை போலீசாருக்கு தெரிவித்ததால் மீண்டும் நாமினேஷன் பேப்பர்களை தயார் செய்து கொண்டு நாலே முக்கால் மணிக்கு போலீசாருடன் சேர்ந்து நாமினேஷன் நிலையத்திற்கு சென்றார்.

nellur-dt
nellur-dt

அப்போது ஒய்எஸ்ஆர் கட்சி மண்டல கன்வீனர் ரகுநாதரெட்டி அவர்களை குறுக்கே நின்று தடுத்தார். எஸ்ஐ ஸ்ரீகாந்த் தலையிட்டு அவர்களை விரட்டிவிட்டு நாமினேஷன் செய்வதற்கு அழைத்துச் சென்றபோது அங்கு பேப்பர்களை சமர்ப்பிக்கும் அறைக்குள் செல்ல முடியாமல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிருந்து கதவை தாழ்பாள் போட்டார்கள். அதனால் பிஜேபி ஆதரவாளர் சுசீலாம்மா அங்கேயே உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

அதற்குள் எஸ்ஐ, அறையில் இருந்த பெண் அதிகாரியோடு பேசி தாழ்ப்பாளை நீக்கி உள்ளே அழைத்துச் சென்றார். ஆனால் ஒய் எஸ்ஆர் தலைவர்கள் மீண்டும் அங்கு சென்று பெண் அதிகாரியை எச்சரித்தனர். 4.50 மணிக்கு உள்ளே வந்தால் எவ்வாறு நாமினேஷன் ஏற்றுக்கொள்வீர்கள்? நீங்கள் தெலுங்குதேசம் கட்சியின் ஏஜென்டுகளா என்று கூச்சலிட்டனர். இறுதியில் நேரம் தாண்டி விட்டதால் அவருடைய நாமினேஷன் பேப்பர்களை எடுத்துக்கொள்ள இயலாது என்று தேர்தல் அதிகாரி மல்லிகார்ஜுன் மறுத்துவிட்டார். அதனால் சுசீலாம்மா அங்கேயே கண்ணீர் விட்டு கலங்கினார். மிகவும் மனம் வருந்தினார்.

அதன்பிறகு புஜ்ஜிரெட்டிபாளெம் சிஐ சுரேஷ் பாபுவிடம் தன் வேதனையை வெளியிட்டார். இந்த மொத்த சம்பவத்தில் அரசியல் தலைவர்களின் அடாவடித்தனத்தை பார்த்தும் பார்க்காததுபோல் இருந்த அதிகாரிகளின் நிலை கவனிக்கத்தக்கது.

இதனால் சித்திபுரத்தில் நாமினேசன் தாக்கல் கெடு முடிந்துவிட்டதால் ஒரே ஒரு நாமினேஷன் மட்டுமே தாக்கல் ஆகியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories