மேற்குத் தொடர்ச்சி மலையை ஓட்டி ஓரிரு இடங்களில் மழை!

Published:

weather-feb23
weather-feb23

மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டி, ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என்றும், மற்றபடி வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

imdchennai-report-feb23
imdchennai-report-feb23

முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் (வானிலை அறிக்கை 23.02.2021 மதியம் 1245 மணி) இது குறித்து தெரிவித்தது…

அரபிக்கடல் பகுதியில் வட கேரளா, கர்நாடகா ஒட்டிய கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல காற்றுச் சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று – மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும்.

24.02.2021 வருகின்ற மார்ச்சு 03 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.

தமிழகத்தில் 22.02.2021 காலை 0830 மணி முதல் 23.02.2021 காலை 0830 மணி வரை பெய்த மழை அளவுகள் (செண்டிமீட்டரில்): கூனூர் PTO (நீலகிரி) 6; கூனூர், அலகாரி எஸ்டேட் (நீலகிரி) தலா 3; கோத்தகிரி, பீலமலை எஸ்டேட் (நீலகிரி), சோலையார் (கோவை) தலா 1…

ALSO READ:  வித்யா ததாதி விநயம்! பணிவே வெற்றியாளரின் உன்னதப் பண்பு!

Related articles

Recent articles

spot_img