முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொத்து மதிப்பு!

அடடே... அப்படியா? சற்றுமுன்
cm - 2026

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற இருக்கிறது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் பரபரப்பாக பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன.

வேட்பு மனுத்தாக்கலும் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி தொகுதியிலேயே இம்முறையும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ஒவ்வொரு வேட்பாளரும் அவர்களுடைய சொத்து விபரங்களை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் முதல்வர் எடப்பாடி தாக்கல்செய்த பிரமாண பத்திரத்தில் தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டுள்ளார்.

இதில் அவர் பெயரில் உள்ள சொத்துக்களின் மொத்த மதிப்புரூ.47.64 லட்சம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது பெயரில் அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை என்றும், குடும்ப சொத்தாக 22 ஏக்கர் நிலம், 6 ஆயிரத்து 700 சதுரடி வீட்டடி மனை மட்டுமே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இதுவரை முதல்வர் பெயரில் சொந்த வீடு, நிலம் எதுவும் இல்லை .

கடன் -ரூ.15 லட்சம்
கையிருப்பு ரூ.6 லட்சம்
தங்க நகைகள் -100 கிராம்
வைப்புத்தொகை- ரூ.37.45 லட்சம்

மனைவி பெயரில்
அசையும் சொத்து ரூ.1 .4கோடி
அசையா சொத்து ரூ.2.89 கோடி
கடன் ரூ.14.75 லட்சம்
ரொக்க கையிருப்பு ரூ.2 லட்சம்
90 பவுன் நகை
வைப்புத்தொகை- ரூ.2.52 லட்சம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.