மூன்று வார இடைவெளியில் இரு கர்ப்பம்! இரட்டை குழந்தைகளை பெற்ற பெண்!

Published:

twins - 2026

இங்கிலாந்து நாட்டில் பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்த போது மீண்டும் கருவுற்று இரட்டை குழந்தைகளை பெற்றுள்ளார். மருத்துவ உலகில் இதனை சூப்பர்ஃபெட்டேஷன் என்று அழைக்கின்றனர்.

இங்கிலாந்தின் பாத் நகரைச் சேர்ந்த ரெபேக்கா ராபர்ட்ஸ் (39) சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாகிவிட்டார். அவர் தனது கணவருடன் உடலுறவு கொண்ட சில நாட்கள் கழித்து மீண்டும் கர்ப்பமாகி உள்ளார். அவர் கடந்தாண்டு செப்டம்பர் 17-ம் தேதி ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை என இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

இவர்கள் இரட்டையர்கள் என்றாலும் மூன்று வார இடைவெளியில் கருத்தரிக்கப்பட்டுள்ளனர்.

ஆண் குழந்தைக்கு நோவா என்றும் பெண் குழந்தைக்கு ரோசாலி என்றும் பெயர் வைத்துள்ளனர். ஆண் குழந்தையுடன் ஒப்பிடும் போது பெண் குழந்தை சிறியதாகவும், பலவீனமாகவும் பிறந்து உள்ளது. இதற்கு காரணம் ரோசாலி முன்கூட்டியே பிறந்தது தான். இதனால் ரோசாலி 95 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆண் குழந்தை நோவாக்கு எந்த பிரச்சனையும் இல்லையென்றாலும் அந்த குழந்தையும் மூன்று வாரங்கள் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

இவர்கள் இரட்டையர்கள் என்றாலும் மூன்று வார இடைவெளியில் கருத்தரிக்கப்பட்டுள்ளனர்.

ALSO READ:  FIFA 2026: ரவுண்ட் 16... கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

ஆண் குழந்தைக்கு நோவா என்றும் பெண் குழந்தைக்கு ரோசாலி என்றும் பெயர் வைத்துள்ளனர். ஆண் குழந்தையுடன் ஒப்பிடும் போது பெண் குழந்தை சிறியதாகவும், பலவீனமாகவும் பிறந்து உள்ளது. இதற்கு காரணம் ரோசாலி முன்கூட்டியே பிறந்தது தான். இதனால் ரோசாலி 95 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆண் குழந்தை நோவாக்கு எந்த பிரச்சனையும் இல்லையென்றாலும் அந்த குழந்தையும் மூன்று வாரங்கள் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

சூப்பர்ஃபெட்டேஷன் போன்ற அரிய நிகழ்வுகள் உலகில் 0.3% பெண்களை மட்டுமே பாதிக்கும். ஆனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இரண்டாவது குழந்தை கர்ப்ப காலத்தில் இறக்கிறது. ஆனால் ரெபேக்கா ராபர்ட்ஸுக்கு பிறந்த இரண்டாவது குழந்தையும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

Related articles

Recent articles

spot_img