கட்டுப்பாடுகளால்… வாழ்வாதாரம் பாதிப்பு: கலைஞர்கள் ஆர்ப்பாட்டம்!

அடடே... அப்படியா? மதுரை லைஃப் ஸ்டைல்
madurai kalaikoothadi - 2026

கொரோனா கால கட்டுப்பாடுகளால், தங்கள் வாழ்வாதாரம் பாதிப்பதாக கழைக்கூத்தாடிகள், கலைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் கொரோனா 2-ம் அலை பரவல்  வெகமேடுத்து வரும் நிலையில் பல்வேறு தடை காரணமாக கட்டுப்பாடுகள் அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், தங்களது  வாழ்வாதாரம் பாதிக்கப் படுவதாகக் கூறி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் கழைக் கூத்தாடிகள் அமைப்பினர், நாடக நடிகர் கலைஞர்கள் பல்வேறு அமைப்பினர், வீரத்தாய் வேலுநாச்சியார் பேரவை ஆகியன சார்பில் தமிழ்நாடு மாநில பொதுச்செயலர் குமாரம் எஸ். வசந்தகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

உடன் மாநில இளைஞர் அணி  செயலாளர் தம்பி மீனாட்சி சுந்தரம் உள்பட, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த கலைஞர்கள் திரளாக பங்கேற்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.