பேனர்கள் தவிர்க்கப் பட வேண்டும்!

Published:

stalin banner1 - 2026

பேனர்கள் தவிர்க்க வேண்டும் என கழகத்தலைவர் கராறாக அறிவுறுத்தியுள்ளார். பேனர்கள், கட்அவுட், ஆபத்தான அலங்கார மின்விளக்குகள், ஆடம்பரமான வெட்டிச் செலவு திருமணங்கள் அவசியம் கூடாது என்ற நிலைப்பாடு வர வேண்டும்.

சுவரெழுத்து விளம்பரங்கள் தமிழகத்தைப் போல வேறு எந்த மாநிலங்களில் இல்லை.சுவரெழுத்து விளம்பரங்கள் தொழில்நுட்பத்தால் புதிய வடிவங்களை எடுத்தன.

இவையாவும் வெற்றுப் பெருமையை சொல்லிக்கொள்ளத்தான் மிக விரும்பி செய்யப்படுகிறது. இவையாவும் எந்தவித ஆக்கப்பூர்வமான நிலைக்கும், பயன்பாட்டுக்கும் நம்மை அழைத்துச் செல்லாது என்பதை உணர வேண்டிய நேரம் வந்துவிட்டது.

உத்தமர் காந்தி வீட்டுத் திருமணத்தில் அவரோடு சேரத்து பத்து பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.நேரு, படேல், போஸ் போன்ற தலைவர்களுக்குக்கூட அன்னல் காந்தி அழைப்பு விடுக்கவில்லை.

தான் நூற்ற நூலை விற்று, புதுமணத் தம்பதிகளுக்கு எளிய ஆடையை வாங்கிக் கொடுத்தார் காந்தி. இப்படியெல்லாம் கடந்தகால பல நிகழ்வுகள்.

ஏகப்பட்ட பந்தாவான திருமணங்கள் சில நேரங்களில் முகம் சுழிக்க வைக்கின்றன. தகுதி அற்ற பட்டங்களை சொல்லும் தேவையற்ற சுவரொட்டிகள், பேனர், பிளக்ஸ், கட்அவுட், அலங்கார மின்விளக்குகள் இவை யாவும் ஒரு நாள் நிகழ்ச்சிக்கு மட்டுமே………
எவ்வளவு செலவு? அதனால், நாட்டுக்கு என்ன பயன்?

ALSO READ:  முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

பொதுமக்களுக்கு இடையூறு செய்து நாலு கட் அவுட் வைத்தால்தான் மதிப்பார்கள் என்ற அளவு ஒரு கலாசாரம் தமிழகத்தில் வளர்ந்தது. இன்று சமூக ஊடகங்கள் காலத்தில் இந்த பழைய வெட்டி செலவுகள் முறைகள் தேவையில்லை.

இந்த ஆர்ப்பாட்டமான, ஆடம்பரமான போலியைத் தவிர்க்கவும். எளிமையே அழகு. அதைப்போற்றுகிறது கழகத் தலைவரின் கடுமையான இந்த எச்சரிக்கை. இது நாட்டுக்கு அவசியமான ஒன்றும் கூட.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன். (வழக்குரைஞர், செய்தித் தொடர்பாளர், திமுக.,)

Related articles

Recent articles

spot_img