ஏப்.20 முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு!

Published:

tnsecretariat
tnsecretariat

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வரும் ஏப்ரல் 20ஆம் தேதி அதிகாலை முதல் மறு உத்தரவு வரும் வரை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி முடிய இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்படும் என்று, தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இரவு ஊரடங்கின் போது தனியார்/ பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்சி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதி இல்லை.

வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்து செயல்பட அனுமதி இல்லை

போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும்போது கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்

விமான நிலையம், ரயில் நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி, தனியார் வாகன உபயோகம் அனுமதி

பால், பத்திரிகை விநியோகம் மருத்துவமனை, சரக்கு வாகனங்கள், எரிபொருள் வாகனங்கள் செல்ல அனுமதி

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தகவல் தொழில் நுட்ப ஊழியர்கள் 50 சதவிகிதம் பேர் வீட்டிலிருந்தே பணிபுரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.

ஊடகம் மற்றும் பத்திரிகை துறையினர் தொடர்ந்து இரவிலும் செயல்படலாம்.

பெட்ரோல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது

மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர், வணிக வளாகங்கள் இயங்க அனுமதி இல்லை. இதை கடைபிடிக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img