
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் அருண். பொறியியல் பட்டதாரியான இவர் ஹைதாபாத்தில் வேலை செய்து வந்துள்ளார்.

இவர் ஆன்லைனில் புடவைகள், நகைகள் விற்பனை செய்யப்படும் என வாட்ஸ்அப் குரூப் ஆரம்பித்து அதில் புடவை, நகைகளின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இதை கண்ட சில பெண்கள் ஆன்லைனில் ஈசியாக வாங்கி கொள்ளலாம் என்று நினைத்து அந்த வாட்ஸ் அப் குரூப்பில் இணைந்துள்ளனர்.

நாளாக நாளாக அந்த வாட்ஸ் அப் குரூப்பில் பெண்களுடன் சாட் செய்த அவர், சில ஆபாச போட்டோக்களை அதில் பதிவிட்டுள்ளார்.

பின்னர் அந்த பெண்களை உறவுக்கு அழைத்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த அந்த பெண்கள் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணைக்குப் பின் மாணிக்கத்தை கையும் களவுமாக பிடித்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் தள்ளினர்



