பொய் பரப்பும் திமுக.,! தேர்தல் ஆணையத்தின் சட்ட நடவடிக்கை தேவை!

Published:

election commission
election commission

தேர்தல் கமிஷன் இன்னமும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வில்லை எனில், திமுக & கமல் கிளப்பும் ஐயங்கள் உண்மை என்றே வெகுஜன புத்தியில் ஆழமாகப் பதிந்துவிடும்

ஒன்று வலிமையாக இந்த சந்தேகங்களை மறுத்து விளக்கமான அறிக்கை தர வேண்டும்

அல்லது இவ்வாறு அவர்கள் கிளப்பும் புகார்கள் பொய் என்றால் அவர்கள் மீது வழக்குத் தொடர வேண்டும்

  1. வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்ட இடங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதாக கமலஹாசன் கூறுகிறார்
  2. எந்தெந்த வாக்கு எண்ணிக்கை ‘மய்யங்களில்’ கமலஹாசன் அவ்வாறு மர்ம நபர்கள் நடமாடியதைக் கண்டறிந்தார் என்பதைத் தேர்தல் கமிஷன் எழுத்துபூர்வமாகக் கமலஹாசனிடம் கேட்டுப் பெற வேண்டும்
  3. அப்படிக் கமலஹாசன் புகாரில் உண்மை இருந்தால் அவ்வாறு ‘மர்ம நபர்’ களை அனுமதித்த அதிகாரிகள் எவர்? என்று தேர்தல் கமிஷன் கண்டறிந்து அவர்கள் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
  4. அவ்வாறில்லாமல் கமல் பொத்தாம் பொதுவாக – தான் காற்றுவாக்கில் கேள்விப்பட்டதை – ஒரு பொதுவெளியில் கூறினார் என்றால் கமலஹாசன் மீது தேர்தல் ஆணையம் அவதூறு வழக்குப் போட வேண்டும்
  5. திமுக கிளப்பும் ஐயங்கள் – புகார்கள் எந்த விஞ்ஞான அடிப்படைக்கும் EVM விஷயத்தில் அப்பாற்பட்டவை
  6. ஆனால் மெல்ல, மெல்ல, மெல்ல… மக்கள் மனதில் படித்தவர்கள் உட்பட ஏற்கனவே வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளைச் சுற்றி ஏதோ விஷமம் ஏதோ ஃபிராடு” நடக்கிறது என்ற எண்ணத்தை தங்களின் வலிமையான பிரசாரம் மூலம் ஏற்படுத்திவிட்டார்கள்
  7. எனவே தேர்தல் கமிஷன் மிக மிக மிகத் தெளிவான அறிக்கையை – EVM களின் நம்பகத்தன்மை / அவை இப்போது வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பான முறை -இவை குறித்து வெளியிட வேண்டும்
  8. எல்லா செய்தித் தாள்கள், டிவி விளம்பரங்கள் மூலம் தேர்தல் ஆணையம் மிகப் பெரிய அளவில் – திமுகவினர் கிளப்பியுள்ள சந்தேகங்களுக்கு பாயிண்ட் பாயிண்டாக மக்களுக்குப் புரியும் வகையில் EVM கள் தற்போது வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறித்து விளக்க வேண்டும்
  9. நடப்பது ஏதோ இரு கட்சிகளின் மோதல் அல்ல
  10. தேர்தல் ஆணையம் என்ற அமைப்பின் செயல்பாட்டின் மீதும், தேர்தல் ஆணையத்தின் ஒட்டுமொத்த நம்பகத்தன்மை மீதும் தொடுக்கப்படும் தாக்குதல் இது
  11. ஜனநாயகமாவது? வெங்காயமாவது?- என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் ஆழப் பதியவைக்கும் அபாயகரமான முயற்சியைத்தான் திமுகவும் கமலஹாசனும் செய்கிறார்கள்
  12. தேர்தல் கமிஷன் தனது நடுநிலைத் தன்மையையும், தில்லுமுல்லு, மோசடி இவை எல்லாவற்றுக்கும் அப்பாற்பட்ட, ஒரு சுதந்திரமான சக்தியாக தான் இயங்குவதை பகிரங்கமாக பிரகடனம் செய்ய வேண்டிய நேரம் இது …
  • முரளி சீதாராமன்
ALSO READ:  எல்லைக்கு உள்ளும் புறமும்... பிரதமரை குறி வைக்கும் அபாயம்!

Related articles

Recent articles

spot_img