ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள்! உலக சாதனை படைத்த பெண்மணி!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன்
Teboho Tsotetsi and Gosiame Sithole
Teboho Tsotetsi and Gosiame Sithole

ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் பெற்றெடுத்த பெண்மணி.
பிரசவத்தில் 7 ஆண் குழந்தைகள் மற்றும் 3 பெண் குழந்தைகள் என மொத்தம் பத்து குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

தென்னாபிரிக்காவில் Teboho Tsotetsi மற்றும் Gosiame Sithole என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர்.

இவருக்கு, ஏற்கனவே ஆறு வயதில் இரட்டை குழந்தைகள் உள்ள நிலையில், Sithole (37) மீண்டும் கர்ப்பமாக இருந்த நிலையில், கடந்த 7-ம் தேதி இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இவர் பிரிட்டோரியாவில் அமைந்திருக்கும் மருத்துவமனையில் இவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் நடைபெற்றுள்ளது.

இந்த பிரசவத்தில் 7 ஆண் குழந்தைகள் மற்றும் 3 பெண் குழந்தைகள் என மொத்தம் பத்து குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

மேலும், இவரது பிரசவ காலத்தில் இவரை பரிசோதித்த மருத்துவர்கள் இவருக்கு எட்டு குழந்தைகள் வரை பிறக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

ஆனால் இவருக்கு தற்போது 10 குழந்தைகள் பிறந்துள்ளது உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் மாலி நாட்டை சேர்ந்த ஹலிமா சிசி என்ற 25 வயது பெண் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.