Screenshot 2021 0626 133809 - 2026

இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் வரதட்சணைக்கு எதிராக பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.

கேரளாவில் தொடர்ந்து ஒரே வாரத்தில் 3 இளம்பெண்கள் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டனர். இதனால் அங்கு வரதட்சணைக்கு எதிராக பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்து வரதட்சனை கொடுக்க மாட்டோம் என பதிவிட்ட புகைப்படங்கள் வைரலானது.

இதற்கு நேர்மாறாக இதையும் கேட்காதீர்கள் என்று தற்போது ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதனை ஆண்கள் தரப்பில் ஒருவர் பதிவிட்டுள்ளார். பெண்களிடம் மட்டும் வரதட்சனை கேட்பதில்லை. அது ஆண்களிடமும் தற்போது கேட்கப்படுகிறது. ஆனால் அது கேட்கும் விதம் தான் வேறு எனப் பொருள்படும்படி இதையும் கேட்காதீர்கள் என கார், 50.000 ஊதியம், என பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending