ஆர்எஸ்எஸ்., தலைவர் வருகை; சாலைகளை சீரமைக்க மதுரை மாநகராட்சி உத்தரவு!

Published:

mohanjibhagavat rss
mohanjibhagavat rss

மதுரை: மதுரையில் நடைபெறும் 4 நாட்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன்பகவத் செல்லும் பகுதிகளான விமானநிலையத்திலிருந்து அவர் கலந்துகொள்ளும் சாய்பாபா கோவில் அமைந்துள்ள சத்யசாய்நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளை சீரமைத்து தூய்மையாக வைக்கவும், தெரு விளக்குகளை பராமரிக்கவும், அவரின் வருகையின் போது சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளாமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும் என மாநகராட்சி மண்டல அலுவலர்களுக்கு உதவி ஆணையாளர் உத்தரவு வெளியிட்டுள்ளார்.

madurai corporation circular - 2026

மதுரையில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்துகொள்ள உள்ள நிகழ்ச்சிக்காக அவர் செல்லும் வழித் தடங்களில் சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பிய விவகாரத்தை சர்ச்சையாக்கியுள்ளார் மதுரை எம்.பி., சு.வெங்கடேசன்.

“அரசின் எந்த விதிகளின் படி மதுரை மாநகராட்சியின் உதவி ஆணையர் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார் என்பதை மாவட்ட நிர்வாகம் உடனடியாக விளக்க வேண்டும்” என்று, மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பினார்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

அதற்கு, “உச்சக்கட்ட பாதுகாப்பு உள்ள முக்கிய பிரமுகர்களுக்கு எப்போதும் செய்யக் கூடிய பணிதான்” மதுரை மாநகராட்சி ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img