December 5, 2025, 2:52 PM
26.9 C
Chennai

அம்பாள் விக்ரஹத்தை அசிங்கப் படுத்தி… ‘மர்ம நபர்’கள் வெறிச்செயல்! கொதித்துப் போயுள்ள பக்தர்கள்!

panchalingeswarar temple kaveripakkam - 2025

ஆடி வெள்ளி, அம்மன் மாதம் என்றெல்லாம் இன்றைய தினத்தை சிறப்புடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் அம்மன் பக்தர்கள், இந்தச் செய்தியைக் கேட்டு கொதித்துப் போயிருக்கிறார்கள்.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தை அடுத்த பஞ்சலிங்கேஸ்வரர் கோவிலில் மர்ம நபர்கள் பெரும் அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவு அம்மன் விக்ரஹத்தின்  வஸ்திரத்தினை அவிழ்த்து, விந்துவினைப் பீய்ச்சியடித்து, அறுவறுக்கத்தக்க கொடூரமான செயல்களில் ஈடுபட்டுள்ளனர். 

கடந்த ஒரு மாதத்தில் 3 முறை இவ்வாறு நடைபெற்றுள்ளது. இந்து மத கோயிலையும், வழிபாட்டையும், அம்மன் விக்ரஹத்தையும் அசிங்கப்படுத்தும், அவமானப்படுத்தும் இந்து மத விரோதிகள் குறித்து புகார்களை அளித்தும் காவல்துறையும், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை என்று கூறி, இன்று காலை இந்து முன்னணி அமைப்பினர் இதனைக் கண்டித்து  போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்தப் பிரச்னை குறித்து தெரிவித்த இந்து முன்னணி அமைப்பின் பொறுப்பாளர் டி.வி.ராஜேஷ், இது பல்வேறு சமூகத்தினரும் வந்து வழிபடும் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்! இங்கே பாதுகாப்பு ஏற்பாடுகளில் அதிகாரிகள் கோட்டை விட்டிருக்கிறார்கள். வன்னியர் சமுதாயத்தினர் அதிகம் இருந்தாலும், அருகே மதம் மாறியவர்கள், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் என பல தரப்பினரும் வசித்து வருகின்றார்கள். இது ஊருக்கு ஒதுக்குப் புறமாக வெளியில் இருக்கும் சிவன் கோயில். எனவே இந்தச் செயல்களில் ஈடுபடுபவர்கள் யார் என்பது குறித்து சரியான விவரம் தெரியவில்லை.

இந்தக் கொடூரமான செயல் குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் எடுத்துச் சொன்னோம். புகார் மனுவும் அளித்தோம். அவர் விரைவில் இங்கே கண்காணிப்பு கேமரா அமைக்க வழி செய்வதாகவும், இந்தக் கொடூரமான செயலில் ஈடுபட்டவர்களை கண்டறிவதாகவும் கூறியிருக்கிறார்… என்றார். 

temple ambal - 2025

கடந்த ஜூன் 22ஆம் தேதி இதுபோல் அம்பாளின் விக்ரகம் அசிங்கப்படுத்தப் பட்டுள்ளது. இதைக் கண்டு கொதித்த இந்து முன்னணி அமைப்பினர் இதுகுறித்து கோயில் நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். பின்னரும் பிரதோஷ நாளன்று இதுபோல் அம்பாளின் விக்கிரகம் அசிங்கப்படுத்தப் பட்டு இருப்பதைக் கண்ட இந்து முன்னணி அமைப்பினர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்!

இந்தத் திருக்கோயில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வருகிறது என்பதால் கோயில் செயல் அலுவலர் சித்ரா என்பவரிடம் இது குறித்து புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் உரிய பதில் தரப்படவில்லை என்று தெரிகிறது.

இன்று காலை இந்தச் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று இந்து முன்னணி அமைப்பினர் அறிவித்திருந்தனர். அதன்படி இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது! ஆர்ப்பாட்டத்தின் புகார் மனு ஒன்றினை எழுதி அதை அறநிலையத்துறை செயல் அலுவலர் சித்ராவிடம் அளிப்பதற்காக இந்து முன்னணி பொறுப்பாளர்கள் அவரை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் அவரோ நில ஆக்கிரமிப்பு புகார் தொடர்பாக கண்காணிக்க சென்றுள்ளதால் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வராமல் போனதாக தகவல் அளித்துள்ளார். இது, இந்து முன்னணி அமைப்பினரை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

ஆலய அம்மன் விக்ரகம் அசிங்கப்படுத்தப் பட்டு இவ்வளவு தூரம் பக்தர்கள் கொதிப்படைந்து இருக்கும் நிலையில் அதைக் குறித்து கண்டு கொள்ளாமல் ஏதோ நில ஆக்கிரமிப்பு புகார் என்று காரணம் கூறி சம்பந்தப்பட்ட இடத்துக்கு வராமல் தவிர்த்துள்ள செயல் அலுவலர் சித்ராவின் நடவடிக்கை பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் கண்டனத்தை தெரிவித்த, அந்த அமைப்பின் துறவியர் பேரவை மாநில அமைப்பாளர் சரவண கார்த்திக், காவல் துறையினரின் விரைந்த நடவடிக்கையே, அத்துறையினர் மீது இந்துக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்தவை… திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் இந்துக்களுக்கும் இந்து ஆலயங்கள் தெய்வங்களுக்கும் எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கின்றன… கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கிறிஸ்தவ பாதிரியார் ஜான் பொன்னையா என்பவர் அனைவரும் புனிதமாகக் கருதக்கூடிய பாரத மாதாவை அசிங்கப்படுத்தி பேசியிருக்கிறார்….

ஹிந்துக்கள் மிகவும் புனிதமாக போற்றி வழிபடக்கூடிய பூமாதேவியை கேவலப்படுத்தியும் அசிங்கப்படுத்தியும் பேசியிருக்கிறார்…

இவற்றில் புகார் கொடுத்தால் திமுக ஆட்சியில் ஒப்புக்கு வெறும் வழக்குப்பதிவுடன் இவையெல்லாம் நின்றுவிடுகிறது…

இப்போது ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் அருகில் தெய்வ விக்ரஹத்தை அசிங்கப்படுத்தி இருக்கிறார்கள் சிலர் அல்லது ஒருவர் இதை காவல்துறையினர் தான் விசாரித்து கண்டறிய வேண்டும்.. அந்த ஆலயத்தின் செயல் அலுவலரிடம் புகார் அளித்தும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தக்க நடவடிக்கை எடுக்காமல் இருந்து இருக்கிறார் எனவே இதே தவறுகள் மீண்டும் மீண்டும் அங்கே நடந்து கொண்டிருக்கின்றன இது வன்மையாக கண்டிக்கத்தக்கது…

மனம் பிறழ்வுடன் வன்மத்துடன் நடந்து கொண்டிருக்கும் நபர்களை கண்காணித்து நடவடிக்கை எடுத்து ஹிந்துக்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அறநிலையத் துறை அதிகாரிக்கு உண்டு…

இதுபோன்று மன வக்கிரத்துடன் தெய்வ விக்ரகத்தின் மீது தனது வன்மத்தை வெளிப்படுத்திய எவருமே வெளியில் பெண்களிடத்தில் எப்படி நடந்து கொள்வார் என்பது நமக்கு தெளிவாக தெரிகிறது இப்படிப்பட்ட வக்கிரம் பிடித்த அவர்களிடமிருந்து பெண்கள் சமூகத்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கு இருக்கிறது…

இந்த விவகாரத்தில் இந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட பிறகு இதில் வெளியுலகுக்கு தெரிந்திருக்கிறது….

இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை சமூக விரோதிகளை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் கோரிக்கை விடுக்கிறது என்று கூறினார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories