இந்தியா திரும்பிய சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு: ஆந்திர அரசு அறிவித்த பரிசுத் தொகை!

அடடே... அப்படியா? இந்தியா லைஃப் ஸ்டைல் விளையாட்டு
pvsindhu welcomed
pvsindhu welcomed

புகழ்பெற்ற டோக்கியோ ஒலிம்பிக்ஸில் மெடல் சாதித்து திரும்பிய இந்திய வீராங்கனை ஷட்டிலர் தெலுங்குப் பெண் பிவி சிந்து இந்தியா திரும்பினார்.

செவ்வாய்க்கிழமை டெல்லியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த சிந்துவுக்கு பேட்மிட்டன் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (பாய் ) பிரதிநிதிகள், விமான நிலைய அதிகாரிகள், ரசிகர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் பேட்மிட்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சிந்து தாமிரப் பதக்கம் வென்ற செய்தி தெரிந்ததே. இதன் மூலம் வரிசையாக ஒலிம்பிக்கில் இரண்டு ஆண்டுகள் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையாக சிந்து வரலாறு படைத்துள்ளார். 2016 இல் நடந்த ரியோ ஒலிம்பிக்கில் சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இந்த ஆண்டு தாமிரப் பதக்கம் வென்று திரும்பிய சிந்து மற்றும் அவருடைய கோச்சை ‘பாய்’ செகரட்டரி அஜய் சிங்கானியா தம் அதிகாரிகளோடு சேர்ந்து சன்மானம் செய்தார். இது தொடர்பான ஒரு செல்பி வீடியோவை ஷேர் செய்த சிந்து, “நான் மிக மகிழ்ச்சியாக உற்சாகமாக உள்ளேன். பேட்மிட்டன் அசோசியேஷன், மற்றும் என்னை உற்சாகப்படுத்திய ஒவ்வொருவருக்கும் நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக்ஸில் இரண்டாவது மெடலையும் வென்று வரலாறு படைத்த பிவி சிந்துவுக்கு ஆந்திரப் பிரதேச அரசாங்கம் 30 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்தது. ஏபி மாநில விளையாட்டுத் துறை வழக்கப்படி ஒலிம்பிக்ஸில் கோல்ட் மெடல் வின்னருக்கு 75 லட்சம், சில்வர் வென்றால் 50 லட்சம், தாமிரம் என்றால் 30 லட்சம் கொடுப்பது வழக்கம்.

அதில் ஒரு பாகமாகவே சிந்துவுக்கு இந்த தொகையை பரிசு அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டார். டோக்கியோ செல்லும் முன்பு ஏபி விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் ஒய்எஸ் ஜகன் உற்சாக பரிசாக 5 லட்சம் ரூபாய் அளித்தார்.

சிந்துவோடு கூட மற்றுமொரு பேட்மிட்டன் பிளேயர் சாத்விக்சாயிராஜ், ஹாக்கி ப்ளேயர் ரஜினி கூட இந்த உற்சாகமூட்டும் தொகையை பரிசாகப் பெற்றனர். இந்த சமயத்திலேயே விசாகப்பட்டினத்தில் பேட்மிட்டன் அகாடமி ஏற்பாடு செய்வதற்கு சிந்துவுக்கு இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்கியதாக முதல்வர் ஜகன் அறிவித்தார்.

இப்போது சிந்து அரசாங்க அதிகாரியாக உள்ளார். 2016 இல் அவர் ஒலிம்பிக்ஸில் சில்வர் மெடல் வென்ற பின் அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு அவருக்கு டிப்யூடி கலெக்டர் பதவி அளித்தார். அதுமட்டுமின்றி அப்போது மூன்று கோடி ரூபாய் பரிசுத் தொகை கூட வழங்கினார்.
தெலங்காணா அரசாங்கம் கூட 5 கோடி ரூபாய் பரிசு அளித்தது.

புது டெல்லி விமான நிலையத்தில் சிந்துவுக்கு அளித்த உற்சாக வரவேற்பு வீடியோ …

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.