
யூசர்களை Tech ப்ரண்ட்லியாக மாற்றுவது கூகுளுக்கே இருக்கக்கூடிய ஸ்பெஷல். சில கூகுள் செயலிகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலும், அவற்றில் இருக்கும் சில கூடுதலான ஆப்சன்களை பயன்படுத்துவது குறித்து பலருக்கும் தெரிந்திருப்பதில்லை
இதற்கு காரணம் கூகுளில் இருக்கும் சில ஈஸியான டிரிக்கி ஆப்சன்கள் செட்டிங்ஸ் பகுதிக்குள் இருக்கும். அதனைத் தேடி யூஸ் செய்தால் மட்டுமே, இவ்ளோ ஈஸியாக பயன்படுத்தலாமா? என்று நமக்கு வியப்பு ஏற்படும்.
அப்படியான ஈஸி செட்டிங்ஸ்கள் என்னென்ன என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
கூகுள் offline செயலிகள் :
Google டாக்ஸ், தாள்கள் மற்றும் ஸ்லைடுகள் உள்ளிட்ட கூகுள் ஆபிஸ் செயலிகளை ஆன்லைனில் மட்டுமே பயன்படுத்த முடியும் என நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆப்லைனில் கூட உபயோகப்படுத்த முடியும்.
பிரவுசர் மூலம் மேற்கொள்ளாமல், செல்போனில் இருக்கும் செயலிகள் வழியாக உபயோகப்படுத்த வேண்டும் என்றால், இணையம் மட்டும் ஆனில் இருந்தால் போதும்.
Step 1: ஆப்லைனில் கூகுள் செயலிகளை உபயோகப்படுத்த விரும்பினால், பிரவுசரில் Drive.google.com/drive -ஐ திறந்து உள்ளே செல்ல வேண்டும்
Step 2: அங்கு மேல் வலது புறத்தில் இருக்கும் கியர் ஐகானைக் கிளிக் செய்து, செட்டிங்ஸூகளை திறக்க வேண்டும்
Step 3: செட்டிங்ஸில் காண்பிக்கப்படும் ஆஃப்லைன் பிரிவில் கூகுள் ஆபிஸ் ஆஃப்லைன் என்ற செட் பாக்ஸைக் டிக் செய்யுங்கள்.
Step 4: இனிமேல் உங்களுக்குத் தேவையான கோப்புகளை ஆப்லைனில் உருவாக்கிக் கொள்ள முடியும்.
உங்களைப் பற்றி கூகுளுக்கு என்ன தெரியும் என்று தெரிந்து கொள்ளுங்கள் :
கூகுள் உங்களிடம் வைத்திருக்கும் தகவலின் நகலைப் பெறுவது மிகவும் எளிது. Takeout.google.com க்குச் சென்று நீங்கள் பதிவேற்றம் செய்ய விரும்பும் அனைத்து தரவு வகைகளையும் தேர்வு செய்யவும். Next Step-ஐ கிளிக் செய்து, இந்தத் தகவலை நீங்கள் எவ்வாறு பெற விரும்புகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இதன் மூலம் கூகுள் டிரைவ் அல்லது இமெயில் மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில், கூகுள் வைத்திருக்கும் உங்களுடைய தகவல்கள் வந்து சேரும்.
ஜிமெயில் செட்டிங்ஸ் மாற்றம்
ஜிமெயில் அனுப்பும் போது எதிர்பாராத சில சமயங்களில் தவறுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளது அல்லது தவறாக இமெயில் அனுப்பிவிடுவோம். அந்த நேரங்களில், Undo ஆப்சனைப் பயன்படுத்தி தவறாக அனுப்பப்பட்ட மெசேஜூகளை திரும்பப்பெற முடியும்.
அதற்கு கூகுள் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று, General ஐகானை கிளிக் செய்யுங்கள். அங்கு Undo ஆப்சன் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் அதிகபட்சமாக 30 நொடிகள் வரை இருக்கும். ஒருவேளை நீங்கள் தவறாக மெசேஜ் அனுப்பியிருந்தால், 30 நொடிகளுக்குள் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.