
விழுப்புரம் மாவட்டத்தில் தினேஷ் என்ற சிறுவன் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கி உள்ளது. திமுக., கொடி கட்டும் போது ஷாக்கடித்து சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் பொன்முடி மீது நடவடிக்கை எடுங்கள் என்று ஜெயக்குமார் காட்டத்துடன் கூறியுள்ளார்.
திமுக கொடி நட்ட போது ஷாக் அடித்து பலியான சிறுவன் தினேஷின் மரணத்திற்கு அமைச்சர் பொன்முடி பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பொன்முடி-க்கு வரவேற்பு அளிப்பதற்காக கம்பம் நடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த 13 வயது தினேஷ் என்ற சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளான். இதன் பின்னணியில் சில கேள்விகளை அடுக்கியுள்ளனர் சமூகத் தளங்களில்! அவை…
🔸இதுவரை வழக்குப் பதிவு இல்லை.
🔸யாரும் கைதும் செய்யப்படவில்லை.
🔸சேனல்களில் செய்தியில்லை
🔸வைகோ அழவில்லை
🔸கம்யூனிஸ்ட்கள் கண்டனம் இல்லை
🔸அழகிரிக்கு இன்னும் செய்தியே சேரவில்லை
🔸விசிக வின் விசும்பல் துளியுமில்லை
🔸பத்திரிக்கையாளர்கள் மதிமாறன், கரு.பழனியப்பன், ஆர்.கே வருத்தம் கூட தெரிவிக்கவில்லை
🔸கோவன் பொங்கவில்லை
🔸மே17 தி.மு.காந்தி பொங்கவில்லை
🔸வேல்முருகன், வாயில் நுரை ததும்ப உரையாற்றவில்லை
🔸எந்தச் சேனலிலும் பெயளவுக்குக் கூட விவாதமுமில்லை.
🔸ஸ்டாலின் 10 லட்சத்தைத் தூக்கிக் கொண்டு இன்னும் ஓடவில்லை
🔸கனிமொழி இன்னும் போராட்டம் செய்யவில்லை
காரணம் இது நடந்தது, திமுக ஆட்சி
கொடிக்கம்பங்கள் நடும் பணிக்குச் சென்ற 13 வயது சிறுவன் பலியான சம்பவம் நெஞ்சை அதிர வைக்கிறது. கொடிக் கம்பங்களும், பேனர்களும், அலங்கார வளைவுகளும் தொடர்ந்து உயிர்களைக் காவுவாங்குகின்றன. இந்தக் கீழ்மையில் இருந்து அனைத்துக் கட்சிகளுமே விடுபட வேண்டும். – என்று குறிப்பிட்டிருக்கிறார் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்.
18 வயதுக்குட்பட்ட சிறார்களை பணியமர்த்தக் கூடாது என்கிற குழந்தை தொழிலாளர்கள் சட்டம் இருக்கும் போதே விழுப்புரம் மாவட்டத்தில் திருமண நிகழ்வில் பங்கேற்க வந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களை வரவேற்க திமுக கொடி நடும் பணிக்கு #தினேஷ் என்கிற 13வயது சிறுவனை பணியமர்த்தி அச்சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிகழ்வு அதிர்ச்சியளிக்கிறது.
திமுக கொடி நடும் பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் தினேஷின் மரணத்தை காவல்துறை சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. குழந்தை தொழிலாளர்களை பணியமர்த்துவதை சட்டம் தடுக்கும் போது 13வயது சிறுவனை பணியமர்த்தி அச்சிறுவனின் இறப்பிற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்துகிறோம்.
மேலும் கடந்த ஆட்சியின் போது சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்விற்காக சாலையில் வைக்கப்பட்ட அதிமுக விளம்பர பேனர் விழுந்து சுபஸ்ரீ என்கிற பெண் மரணமடைந்த போது அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் அந்நிகழ்வை கடுமையாக விமர்சனம் செய்து செய்தியாக்கியதோடு நேரலை விவாதங்களும் நடத்தின.
ஆனால் தற்போது திமுகவின் அமைச்சரை வரவேற்க கொடிக்கம்பம் நடும் பணியை செய்த சிறுவன் மரணமடைந்ததை எந்த ஊடகங்களும் கண்டு கொள்ளாமல் கடந்து போவதும், வாய்மூடி மெளனியாக இருப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
ஜனநாயகத்தின் நான்காவது தூணாக விளங்கும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் நடுநிலை தவறி ஆளுங்கட்சி சார்புடைய வகையில் ஒருபக்க சார்பு நிலையில் செயல்படுவது ஏற்புடையதல்ல. அது ஆளுங்கட்சிக்கு சாதகமாகி, ஜனநாயகத்திற்கு சவக்குழி தோண்டும் ஆபத்தாகி போகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்… – என்று குறிப்பிட்டுள்ளார், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி.