spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்சிறுவன் மரணத்தில் ஊடகங்களின் சந்தப்பவாத அரசியல்: பாஜக., நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டு!

சிறுவன் மரணத்தில் ஊடகங்களின் சந்தப்பவாத அரசியல்: பாஜக., நாராயணன் திருப்பதி குற்றச்சாட்டு!

- Advertisement -
viluppuram dinesh horz
viluppuram dinesh horz

விழுப்புரத்தில் திமுக., கொடிக்கம்பம் கட்டும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த சிறுவன் தினேஷ் மரணத்தில் ஊடகங்கள் சந்தர்ப்பவாத அரசியல் செய்வதாக பாஜக.,வின் நாராயணன் திருப்பதி குற்றம் சாட்டியிருக்கிறார்.

இது குறித்து அவர் குறிப்பிட்டவை…

விழுப்புரத்தில் தி மு க கட்சி கொடி கட்ட கட்டாயப்படுத்தி அழைத்து சென்ற 7 ஆவது சிறுவன் மின் கம்பத்தில் கொடி கட்டிய போது மின்சாரம் தாக்கி பலி. 2019ம் ஆண்டு சுபஸ்ரீ கட்-அவுட் மரணத்தில் அ தி மு கவை விமர்சித்த அரசியல் கட்சிகளும், தமிழக ஊடகங்களும் இந்த விவகாரத்தில் மௌனம் காப்பது அராஜகம் மட்டுமல்ல, கொடூரம்.

பல நாட்கள் விவாதம் நடத்தி சமூக அக்கறையை வெளிப்படுத்தியவர்கள் இன்று அமைதி காப்பது சந்தர்ப்பவாதம் மட்டுமல்ல, தரம் தாழ்ந்த அரசியலும் கூட!

தொடர்புடையவர்களை கைது செய்து உரிய சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட வேண்டும்.

ஊடகங்களே மனசாட்சியோடு மட்டுமல்ல, மனிதாபிமானத் தோடும் நடந்து கொள்ள முயற்சியுங்கள்.

  • நாராயணன் திருப்பதி.

“13 வயது சிறுவன் தி மு க கொடி நட்டபோது மின்சாரம் தாக்கி இறந்தது உண்மை தான். அந்த குடும்பத்திற்கு ரூபாய் 1.5 லட்சம் இழப்பீடு அளித்து விட்டது தி மு க” : அமைச்சர் பொன்முடி.

தி மு க ஆட்சியில் உயிரின் விலை 1.5 லட்சம்? அதிகார ஆணவம்?

  • நாராயணன் திருப்பதி.

“என்னதான் நிதி உதவி வழங்கினாலும் அவர்களுக்கு அது ஆறுதலாக அமையாது. சுபஸ்ரீயின் தாய், தந்தைக்கு ஆறுதலை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கிறேன்.பேனர் வைத்தது தொடர்பான வழக்கில் அரசு நினைத்தால் அடுத்தவினாடியே குற்றவாளியை கைது செய்திருக்கலாம். ஆனால் நாடகமாடுகிறார்கள்” என்று தி மு க தலைவர் ஸ்டாலின் 2019ல் அ தி மு க திருமண விழாவில் வைத்த பேனர் விழுந்து சுபஸ்ரீ இறந்த போது கூறினார்.

ஆனால், நேற்று விழுப்புரத்தில் திருமண விழாவில் தி மு க கொடி கட்டிய சிறுவன் மின்சாரம் தாக்கி இறந்ததற்கு ருபாய் 1.5 லட்சம் இழப்பீடு கொடுத்து விட்டதாக அமைச்சர் பொன்முடி கூறியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசு நினைத்தால் அடுத்த வினாடியே குற்றவாளியை கைது செய்திருக்கலாம் என்று கூறிய ஸ்டாலின் அவர்களே இப்போது நீங்கள் ஏன் நினைக்கவில்லை? நாடகமாடுகிறீர்களா என்று நாங்கள் கேட்டால் சொல்வீர்களா? நடவடிக்கை எடுப்பீர்களா?

  • நாராயணன் திருப்பதி

“பேனர் கலாசாரத்திற்கு திமுகவினர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” -முதல்வர் மு க ஸ்டாலின்.

இந்த கலாச்சாரத்தால் இழக்கப்படும் உயிருக்கு விலை ‘ஒன்றரை லட்சம்’ என்ற உங்கள் அமைச்சர் பொன்முடியின் புள்ளியை ஏற்கிறீர்களா? மறுக்கிறீர்களா?

  • நாராயணன் திருப்பதி.

“How many more lives will be lost to the power-hungry and anarchist rule?” asked DMK chief M K Stalin, when Subashree died of fall of Flex board in 2019. Now your minister KPonmudi
says he has compensated Dinesh’s life by paying Rs.1.50 lakhs. Is your Govt Power hungry & anarchist rule?

  • Narayanan Thirupathy

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe