vaccine - 2026

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே தடுப்பூசி போட்டுக் கொண்டால் மிக்ஸி இலவசம் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து பலரும் ஆர்வமாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வந்தனர்.

மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதை அதிகப்படுத்த அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

தடுப்பூசி மக்கள் நலனுக்கானது தான் என்றாலும் கூட அவர்களிடம் போதிய விழப்புணர்வு இல்லாததால் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் சிலர் தடுப்பூசி போட்டுக் கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். வெளிநாடுகளில் கூட இந்த நிலைமை இருந்ததால் மக்களுக்காக பல்வேறு பரிசுகள் அறிவிக்கப்பட்டன.

அந்த வகையில் நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மருதூர் வடக்கு ஊராட்சியில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் ஒருவருக்கு குலுக்கல் முறையில் மிக்ஸி வழங்கப்பட்டது.

mixi
mixi

பொதுமக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களில் ஒருவருக்கு குலுக்கல் முறையில் மிக்சி வழங்கப்படும் என அறிவித்திருந்தனர்.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

அதனையடுத்து 400க்கும் மேற்பட்ட நபர்கள் முகாமில் வந்து தடுப்பூசி போட்டுச் சென்றனர். இந்நிலையில் குலுக்கல் முறையில் மலர் என்ற பெண்ணிற்கு மிக்சி வெல்லும் வாய்ப்பு கிடைத்தது.

அவருக்கு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா, ஒன்றிய கவுன்சிலர் இராசேந்திரகுமார் முன்னிலையில் மிக்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்சியில், சுகாதரத்துறையினர் , உள்ளாட்சி பிரதிநிதிகள் , சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending