ட்ரோனைக் கவ்விய முதலை! வெடித்து சிதறிய ட்ரோன்!

அடடே... அப்படியா? உலகம் சற்றுமுன்
Crocodile1
Crocodile1

சுற்றுலாப்பயணிகள் அனுப்பிய ட்ரோனை கவ்வியதால் முதலைக்கு ஏற்பட்ட நிலை குறித்த வீடியோவை பார்த்து பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள எவர்கிளாட்ஸ் பகுதியில் பூங்கா ஒன்று உள்ளது. அங்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள ஏரிப் பகுதியில் அருகில் சென்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது, நீருக்குள் முதலை இருப்பதைக் கண்ட அவர்கள், டிரோன் மூலம் அதனை வீடியோ எடுக்க முயற்சி செய்துள்ளனர். அவர்கள் அனுப்பிய ட்ரோனாது, கரைக்கு அருகாமையில் நீரில் இருந்த முதலைக்கு அருகில் இருந்தவாறு வீடியோ எடுத்துள்ளது.

ஒருவித ஒலியுடன் நீண்ட நேரம் டிரோன் அருகில் இருந்ததால், முதலை திடீரென அந்த டிரோனை கவ்வி விழுங்கி உள்ளது. அந்த ட்ரோனை கவ்விய சிறிது நேரத்தில் முதலையின் வாயில் இருந்து புகை வெளியேறியது.

Crocodile
Crocodile

கரையில் நின்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள், முதலை டிரோன் கேமராவை கவ்வியதை மற்றொரு கேமராவில் படம் பிடித்துக் கொண்டிருந்தனர்.

கிறிஸ் ஆண்டர்சன் என்பவர் பகிர்ந்த இந்த வீடியோவை கூகுள் நிர்வாக இயக்குநர் சுந்தர் பிச்சை தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்தார்.

முதலையின் வாயில் டிரோன் வெடித்த இந்த வீடியோவுக்கு பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

சுற்றுலாப் பயணிகள் தங்களின் வரம்புகளை மீறி செயல்படுவதால், இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறுவதாகவும், இந்த சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கபட வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.