இங்கே விடியல் கலகம்! அங்கே சொதப்பல் திலகம்!

அடடே... அப்படியா? உரத்த சிந்தனை
joe-biden-and-kamala-harris
joe-biden-and-kamala-harris

சொதப்பல் மன்னன் பைடன்!

டிரம்ப்பிடமிருந்து தேர்தலை திருடியும், விடியலை போல பல பொய்களை சொல்லியும் ஜனவரி இறுதியில் ஆட்சிக்கு வந்த பைடனின் சாயம் செப்டம்பருக்குள் வெளுத்துவிட்டது!

அவரது அப்ரூவல் ரேட்டிங் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. அவர் தன் “வேலையை சரியாக செய்கிறார்” என 45.3% பேரும், அவர் தவறாக செய்கிறார் என 49.8% பேரும் தெரிவித்திருக்கிறார்கள் (https://tinyurl.com/8ytw5nfe) .

இடதுசாரி லிபரல்களின் டார்லிங் பைடன் நிலை ஏன் இவ்வளவு மோசமானது?

1, கொரோனா விவகாரத்தை சரிவர கையாளவில்லை. மோசமான பொருளாதாரம் / வேலையின்மை. விலைவாசி ஏற்றம், சட்டவிரோத குடியேற்றம், ஆஃப்கானிஸ்தான் விவகாரத்தில் சொதப்பியது என பல…

2, இவை தவிர, செப்டம்பர் 16 சிறப்பான சம்பவம் ஒன்று நடந்தேறியது. அது, ஆஸ்திரேலியா (Au), இங்கிலாந்து (UK), அமெரிக்கா (US) கூட்டாக சேர்ந்து AUKUS என்ற புதிய அமைப்பை அறிவித்தன. இதன் விளைவாக, ஃபிரான்ஸ் இப்போது அமெரிக்கா, இங்கிலாந்திலுருந்து தன் தூதுவர்களை திரும்ப அழைத்துக் கொண்டுள்ளது – அதாவது, உறவை முறித்துக் கொண்டுள்ளது. இது சமீப காலத்தில் கேட்டிராத ஒன்று.

என்ன பிரச்சினை?

ஆஸ்திரேலியாவுக்கு அணு ஆயுத நீர்மூழ்கி தயாரிக்கும் ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியாவும் ஃபிரான்சும் 2016இல் கையெழுத்திட்டிருந்தன (90 பில்லியன் டாலர் மதிப்பு). இந்த AUKUS வந்ததால், அந்த ஒப்பந்தத்தை தன்னிச்சையாக ரத்து செய்துள்ளது ஆஸ்திரேலியா!

கடுப்பான பிரான்ஸ், செப்டம்பர் 17 அன்று அமெரிக்க உறவை சிறப்பிக்கும் வகையில் வாஷிங்டனில் சிறப்பு விருந்து ஒன்று ஏற்பாடு செய்திருந்ததை ரத்து செய்தது பிரான்ஸ். இன்று தன் தூதுவர்களை திரும்ப பெற்றுள்ளது.

“ஆங்கிலம் பேசும்” இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும், அமெரிக்காவும் பிரஞ்சு பாஷையை கழற்றி விட்டது ஆத்திரமூட்டியுள்ளது ஐரோப்பாவை.

ஆஸ்திரேலியா அணு ஆயுத நீர்மூழ்கி கப்பல் வாங்குவதால் சீனாவுக்கு ஆபத்து. AUKUS கூட்டமும் இந்திய பசிபிக் பிராந்தியத்தை கொண்டே ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றாலும் அதில் இந்தியாவும் ஜப்பானும் இடம் பெறாதது AUKUS செய்த முட்டாள்தனம்.

3, இந்த சொதப்பல் இப்படி இருக்க… பைடனின் அடுத்த சொதப்பல் ஆஃப்கானிஸ்தானின் காபூலில் ‘ஐஸிஸ் பயங்கரவாதிகள்’ என நினைத்து, அமெரிக்காவுக்கு உதவி செய்தவர்கள் பயணித்த காரில் டுரோன் தாக்குதல் நடத்தியிருக்கிறது அமெரிக்கா. இது நடந்து சில வாரங்கள் ஆனாலும், அந்த குற்றத்தை இப்போது அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது. பலியானவர்களில் சிறுவர் – சிறுமியரும் அடங்குவர்.

இன்னும் மூன்றரை ஆண்டுகள் இந்த பைடன் – ஹாரிஸ் கோமாளித்தனத்தை அமெரிக்க மக்களும் உலகமும் சகித்துக் கொள்ள வேண்டிய நிலை!

அடுத்த வாரம் பிரதமர் மோதி அமெரிக்கா செல்கிறார் QUAD கூட்டத்தில் பங்கெடுக்க. அதில் என்னென்ன கூத்து பண்ணப் போகிறாரோ பைடன்!

  • செல்வ நாயகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.