மூன்றே மணி நேரத்தில் மும்பை to ஹைதராபாத்! ரயில்வே அசத்தல் திட்டம்!

Published:

Bullet train
Bullet train

இந்தியாவில் ரயில்வே துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

தொழில் நுப்ட அளவில் மேம்பாடு செய்யப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக மும்பை- ஐதராபாத் இடையே அதிவேக புல்லட் ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து தேசிய அதிவேக ரயில் கழக துணை பொது மேலாளர் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா இடையே புல்லட் ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. 11 ரயில் நிலையங்களை இந்த புல்லட் ரயில் இணைத்து செல்லும். 659.76 கி.மீட்டர் நீளம் கொண்ட இந்த ரயில் பாதை முழுவதும் பசுமை வழிச்சாலையாக அமைக்கப்படும். இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதன் மூலம் மும்பை ஹைதராபாத் பயண நேரத்தை 14 மணி நேரத்தில் இருந்து வெறும் 3 மணி நேரமாக குறைக்கும். தானே, நவிமும்பை, லோனாவாலா, புனே, பாராமதி, பந்தர்பூர், சோலாப்பூர், குல்பர்கா, விகராபாத் மற்றும் ஐதராபாத் உள்பட 11 இடங்களில் இதற்கான ரயில் நிலையங்கள் அமைக்கப்படும்.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

தானே மாவட்டத்தில் மொத்தம் 1,200 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேலும் இந்த ரயில் பாதை முக்கிய விரைவுசாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள், பசுமை நிறைந்த பகுதிகள், பல்வேறு நகரத்தின் பிரதான சாலைகளை கடந்து செல்லும். நில ஆய்வுக்காக ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன எனத் தெரிவித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img